'எனது ஊர் காரைநகர்' இணையத்தளம் காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து நடாத்திய 'காரைநகர் சேவையாளர்' கௌரவிப்பு 05.01.2020
(படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன...!)பிரதான அனுசரணை: திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம்,
இணை அனுசரணை: Dr.வி.விஜயரத்தினம்மேற்படி நிகழ்வு 05.01.2020 அன்று காரைநகர் புதுறோட் சந்தியில் அமைந்துள்ள New Star கல்வி நிலையத்தில் விமர்சையாக நiபெற்றது. இந்நிகழ்வில் 350க்கும் மேற்பட்ட காரைநகர் பாடசாலை மாணவர்களும் 300க்கும் மேற்பட்ட காரை மக்களும் கலந்து கொண்டதுடன், கடந்த சில ஆண்டுகளில் அதிகூடியளவு மக்கள் கலந்து சிறப்பித்த ஒரு நிகழ்வாக அமைந்திருந்ததாக கல்வியாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.


2017ம் ஆண்டு முதன் முறையாக 'காரைநகர் சேவையாளர்' கௌரவிப்பு நிகழ்வினை "எனது ஊர் காரைநகர்" ஆரம்பித்து வைத்தது. அதனைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகளிற்கு ஒரு தடவை காரைநகரில் தன்னலமற்ற வகையில் சேவை ஆற்றியவர்கள், சேவை புரிந்து வருபவர்களை கௌரவிக்கும் வகையில் இரண்டாவது தடவையாக நடைபெற்ற இந்நிகழ்வில் 10 சேவையாளர்கள் பொன்னாடையும் பொற்கிளியும் வழங்கி கௌவிக்கப்பட்டதுடன் சேவையாற்றி மறைந்த 5 சேவையாளர்கள் நினைவு கூரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.


வெளிநாடுகளில் இருந்தும் உள்ழூர் காரை அமைப்புக்களினாலும் நடாத்தப்படும் பலவித ஊக்குவிப்பு நிகழ்வுகள், பரிசளிப்பு நிகழ்வுகள் மற்றும் இதர நிகழ்வுகளில் பார்வையாளர்களாக கலந்து கொள்ளும் மாணவர்கள், மக்களின் தொகை வெகுவாக குறைந்து வந்துள்ளது. அத்துடன் நடாத்தப்படும் நிகழ்வுகளின் ஊடாக காரை மக்களிற்கு விழிப்புணர்வும் விபரங்களும் சென்றடைவதில்லை என்பதனை கருத்தில் கொண்டு "எனது ஊர் காரைநகர்" அனுசரணையாளர்களின் உதவியோடு கலந்து கொண்ட 100 மாணவர்களிற்கும் 25 பார்வையாளர்களிற்கும் குலுக்கல் முறையில் பணப்பரிசினை வழங்கியிருந்ததும் இந்நிகழ்வு சிறப்படைய முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்கியிருந்தது.


அத்துடன் இந்நிகழ்வினை இன்று காரைநகரில் பிரசித்தமாக விளங்கி வரும் New Star கல்வி நிலையத்தில் வகுப்புகளிற்காக புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் நடாத்தியிருந்ததும் மாணவ மாணவிகளை பெருமளவு கலந்து கொள்ள வைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு சிறப்புற நடைபெறுவதற்கு எல்லா வகையிலும் முழுமையான ஆதரவு வழங்கியிருந்த காரைநகர் அபிவிருத்தி சபையினருக்கும், இடவசதியுடன் ஏற்பாடுகளை செய்து வழங்கிய New Star கல்விநிலையம் நிர்வாகி திரு.நிமலன் கணபதிப்பிள்ளை அவர்களிற்கும் அவர்களுடைய நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது "எனது ஊர் காரைநகர்".


மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் தன்னலமற்ற வகையில் பணி புரிபவர்களை வாழும் போதே வாழ்த்துவோம். 2019ம் ஆண்டுக்கான 'காரைநகர் சேவையாளர்' கௌரவமும் பொற்கிளியும் வழங்கி கௌரவிக்கப்பட்ட 10 காரைநகர் சேவையாளர்கள் விபரம் வருமாறு:


1. சிவஸ்ரீ நா.ஞானசம்பந்தகுருக்கள் -1991-1996 வரையான ஈழத்து சிதம்பர சிவப்பணி

2. திரு.வே.செல்வநாயகம் - ஈழத்து சிதம்பரம் ஐயனார் சிவன் இராஜகோபுர திருபபணி

3. திரு.ந.பாக்கியராஜா - ஈழத்து சிதம்பரம் திருப்பணி

4. திரு.க.சோமசேகரம் - வியாவில் ஐயனார் தேவஸ்தானம் ஊடான சமய சமூக பணி

5. சிவஸ்ரீ வி.ஈஸ்வரகுருக்கள் - சிவப்பணி

6. திரு.க.தில்லையம்பலம் - கல்வி மற்றும் சமய சமூக பணி

7. திரு.சண்முகம் சிவஞானம் - சமய மற்றும் கலைப்பணி

8. திரு.சபாரத்தினம் மனோகரன் - களபூமி பிரதேச வளர்ச்சியின் ஈடுபாட்டாளர்

9. திருமதி சூரியா சிவரூபன் - காரை மாணவர்களிற்கான கல்விப்பணி

10. திரு.சங்கரப்பிள்ளை குகராஜா(குகன்) சிரமதானம்,சமுதாய அக்கறை, இளம் விவசாயி.
இவர்களுடன் காரை மண்ணின் சேவையாளர்களாக பணியாற்றி காலத்தால் மறக்கவும் மறைக்கவும் முடியாத தன்னலமற்ற சேவையாளர்களையும் அவர்தம் பணிக்களிற்காக கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது "எனது ஊர் காரைநர்" சஞ்சிகையும் www.karainews.com இணையத்தளமும்.

1. அமரர் சு.முருகேசு - ஈழத்து சிதம்பரம் ஐயனார் சிவன் இராஜகோபுர திருப்பணி

2. அமரர் வே.சிவசுப்பிரமணியம்(10.40 மணியம்) ஈழத்து சிதம்பரம் ஐயனார், சிவன் இராஜகோபுர திருப்பணி.

3. அமரர்.அ.சி.சிவலிங்கம் - மணிவாசகர் சபை மற்றும் ஐயனார் சிவன் இராஜகோபுர திருப்பணி

4. அமரர் ஜெ.தில்லையம்பலவாணர் - காரைநகர் அபிவிருத்தி சபை

5. அமரர் சபாபதி சபாரத்தினம் - பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம்