13 ஆண்டுகளின் பின்னர் கணித பிரிவில் தீவக வலயத்தில் முதன்மை பெறுபேறு பெற்று பொறியியல் பிரிவிற்கு தகுதியாகின்றார் காரைநகர் மாணவி!செல்வி கம்சிகா தேவராசா2007ம் ஆண்டுக்கு பின்னர் காரைநகர் உயர்தர பாடசாலைகளில் இருந்து 3A சித்திபெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகின்றார் காரைநகர் மாணவி.

2020 க.பொ.த.உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A பெறுபேறுகளை பெற்று செல்வி கம்சிகா தேவராசா அவர்கள் பொறியியல் பிரிவிற்கு தெரிவாகும் தகமையை பெற்றுள்ளார்.


காரைநகரில் அன்று முதல் இன்றுவரை கல்வியின் முக்கியத்துவம் அறிந்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளிற்கான கல்வியினை கவனத்துடன் ஊட்டி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்கள் யாழ் நகர பாடசாலைகளிற்கு சென்று கல்வி கற்று வருகின்றனர்.


தரம் 10 வரை காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயின்று வந்தாலும் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவ மாணவிகள் யாழ் நகர பாடசாலைகளிற்கு உயர்தர கல்விக்காக சென்றும் வருகின்றனர். இருந்த போதிலும் காரைநகர் இந்துக்கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இருந்தும் கடந்த ஒவ்வொரு வருடங்களிலும் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.


5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் போதும், 10ம் தர க.பொ.த.சாதாரண தர பொதுப்பரீட்சையின் போதும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை யாழ் நகர பாடசாலைகளிற்கு அனுப்பி வைத்த போதிலும் காரைகர் பாடசாலைகளில் கல்வி கற்று வருடந்தோறும் பல்கலைக்கழகங்களிற்கு செல்லும் மாணவர்களின் தொகை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.


இந்த நிலையில் கடந்த 13 ஆண்டுகளின் பின்னர் காரைநகர் பாடசாலைகளில் மட்டும் கல்வி கற்று முதன்முறையாக கணித பிரிவில் 3A சித்திகளைப் பெற்று முதன் முறையாக பொறியியல் துறைக்கு தெரிவாகும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார் காரைநகர் அல்லின்வீதியை சேர்ந்த செல்வி கம்சிகா தேவராசா. இது ஒரு அபார திறமையும் தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு மாணவியினால் சாதனையாக்க முடிந்துள்ளது.


காரைநகர் பாடசாலைகளின் கல்வி தரத்தினை உயர்த்துவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பல வகையான உதவிகளை இடம் பெயர்ந்த காரைநகர் மக்கள் வருடந்தோறும் வழங்கி வரும் நிலையில் 5ம் தர புலமைப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் 10ம் தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் யாழ் நகர பாடசாலைகளிற்கு ஏற்றுமதி செய்யும் பாடசாலைகளாக காரைநகர் பாடசாலைகள் கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றன.


இதன் காரணமாகவோ அன்றி சூழ்நிலைகள் காரணமாகவோ காரைநகரில் உள்ள உயர்தர வகுப்புக்களை கொண்ட காரைநகர் இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் உயர்தர கணித மற்றும் விஞ்ஞான பீடங்களிற்கு தரம் வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பதில் கல்விச்சமூகம் அக்கறை காட்டுவதில்லை.

செல்வி கம்சிகா தேவராசா அவர்கள் கணித பிரிவில் காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று 3A சித்திகளைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவாக இந்த சாதனையும் இந்த செய்தியும் காரைநகர் பெற்றோர்களிற்கு தமது பாடசாலைகளில் அக்கறையுடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இன்னமும் உள்ளார்கள் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளது.


காரைநகர் பாடசாலைகளிற்கு வெளியிடங்களில் இருந்து வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் கடமைக்காக மட்டுமே கல்வி கற்பிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை அறிந்து கொள்வதோடு மாணவர்களின் நிலமை அறிந்து சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் இதன் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.


செல்வி கம்சிகா தேவராசா தனது பெற்றோர்களுடன்