காரைநகரில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று யாழ்ற்ரன் கல்லூரி முன்னிலை வகிக்கின்றது2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தர சாதாரண தர பரீட்சை முடிவுகள் 24.09.2021 அன்று இணையவழி ஊடாக வெளியானது. காரைநகரில் தரம் 10 வரையான கற்கை செயற்பாடுகளை கொண்டு இயங்கி வரும் காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி, களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் மற்றும் வியாவில் சைவ தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.


யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் காரைநகரில் கல்வி கற்று அதிகூடிய பெறுபேறானா 8A, B மற்றும் 3A உடன் கூடிய புள்ளிகளைப்பெற்று 11 மாணவர்களும் குறிப்பிடத்தக்களவு முன்னிலை பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் இருந்து அதிகூடிய பெறுபேறாக 5A, 3B மற்றும் 3A உடன் கூடிய புள்ளிகளை பெற்று 5 மாணவர்கள் வரையானோர் குறிப்பிடத்தக்களவு முன்னிலை பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.


காரைநகரில் மேற்படி நான்கு பாடசாலைகளில் இருந்தும் 2010ம் ஆண்டு 110 மாணவர்கள் வரை க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த போதிலும் 60 சதவீத மாணவர்களே க.பொ.த உயர்தரம் கற்க தகுதி பெறுகின்றார்கள் என்பதும் கடந்த மூன்று தசாப்தங்களில் குறைவான பரீட்சை பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுள்ளார்கள் என புள்ளி விபரங்களை தெரிவிக்கின்றது என்பது கல்வியாளர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.


யாழ்ற்ரன் கல்லூரியில் இருந்து குறிப்பிடத்தக்க பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

1. புஸ்பராஜா கஜதீபன் 8A, B

2. சிவபாலன் லக்ஷிகன் 7A, B, C

3. சிவநேஸ்வரன் பிரணவன் 5A, B, C, S

4. சண்முகராசா அகிலா 5A, B, C, S

5. பிரபாகரன் ரெந்தினி 5A, 3B

6. சுரேஸ்குமார் கம்ஷிகா 4A, 2B, C, S

7. அருளானந்தம் வசீகரன் 3A, 2B, C, S

8. தவராவா அருண்குமார் 3A, 5B, C

9. சந்திரசேகரன் அமிர்தா 3A, 2B, 2C, S

10. சிவகுமாரன் லக்ஷனா 3A, 2B, C, S

11. சிவலிங்கம் துஷ்யந்தினி 3A, 2B, C, 2S


காரைநகர் இந்துக் கல்லூரியில் இருந்து குறிப்பிடத்தக்க பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

1. திருநாவுக்கரசு ஆதிரை 5A, 3B

2. தசிகரன் கஜகரன் 5A, 2B, C, S

3. உலககுருநாதன் பிருந்தா 4A, 3B, S

4. தவநாதன் கீர்த்திகா 3A, 3B, C, S

5. ரவிராஜ் அருள்ராஜ் 3A, 3B, 2C, 1S