‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக தொடரும் இடர்கால கல்வி ஊக்குவிப்பு...!காரைநகரில் கொரோனா பெரும்தொற்று காரணமாக தற்காலிகமாக ஊதியம் இழந்த மூன்றுக்கும் மேற்பட்ட பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களைக் கொண்ட மூன்று குடும்பங்களிற்கு தொடர்ச்சியாக மூன்று மாதங்களிற்கு 20,000 ரூபா, 15,000 ரூபா, 15,000 ரூபா வென மாதம் ஒன்றிற்கு 50,000 ரூபாய்கள் வீதம் மூன்று மாதங்களிற்கு வழங்கப்படவுள்ளன. நிதி உதவி வழங்கப்பட்ட குடும்பங்கள் வியாவில், சிவன்கோயிலடி, மாப்பாணவூரி ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள்.


முதற்கட்டமாக ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் 12.10.2021 அன்று வழங்கப்பட்டன. பாடசாலை செல்லும் மாணவர்களைக்கொண்ட மூன்று குடும்பங்கள் கல்வி மற்றும் குடும்ப பின்னணிகளைக் கொண்டு தெரிவு செய்யப்பட்டு இந்த கொடுப்பனவுகள் நிறைவேற்றப்படுகின்றன.


இதனை செயற்படுத்த உதவிய ஆசிரியர் திரு.நிமலன் கணபதிப்பிள்ளை அவர்களிற்கும் இதற்கான நிதியுதவியினை ‘எனது ஊர் காநைரகர்’ ஊடாக வழங்கி வரும் காரை உறவுகளிற்கும் மனமார்ந்த நன்றி.


குறிப்பிட்ட நிதியுதவியினை பெற்றுக்கொண்ட குடும்பங்களிடம் இருந்து நிதியுதவியளித்த காரை உறவிற்கு அதற்குரிய அத்தாட்சிகள் வழங்கப்பட்டுள்ளன.