கனடா காரை கலாசார மன்றம்
2022 ஒன்றுகூடலும் விளக்கமும்..!(கீழே 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன புகைப்படங்களின் மேல் அழுத்துவதன் மூலம் பெரிதாக பார்த்துக்கொள்ளலாம்)கனடா காரை கலாசார மன்றத்தின் வருடாந்த ஒன்று கூடல் 2019ம் ஆண்டுக்கு பின்னர் 2022.08.20 அன்று கனடா ஸ்காபுரோவில் அமைந்துள்ள பூங்காவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் நீண்ட எதிர்பார்ப்புகளிற்கு பின்னர் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் 400க்கும் மேற்பட்ட காரைநகர் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


கனடா காரை கலாசார மன்றம் ஆனையாலும் கவிழ்க்க முடியாத அசுர பலம் கொண்ட ஆலமரம். அதன் விழுதுகள் எப்போதும் தாங்கிக்கொள்ளும். கனடா காரை கலாசார மன்றம் 2015.05.05 அன்று காரைநகர் பாடசாலைகளிற்காக ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு வைப்பில் இட்டு வழங்கிய பின்னர் 2015.05.10 அன்று 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தின் போது கைவிட்டு எண்ணக்கூடிய சிலர் அந்த நிதி வழங்கப்படவில்லை எனவும், சாத்தியம் இல்லையெனவும், தனிப்பட்ட சிலருக்கு அனுப்பப்பட்டதாகவும், பணம் தொலைந்துவிடும், களவெடுக்கப்பட்டுவிடும் என நம்பவைத்து 10.05.2015 அன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை களேபகரமாக்கினார்கள்.


அதன்பின்னர் ஒன்றரை ஆண்டுகளாக கனடா காரை கலாசார மன்றத்தை செயற்பட முடியாதளவில் வங்கிக்கணக்குகளை முடக்கினார்கள், கூட இருந்தே துரோகத்தனமாக செயற்பட்டவர்கள் என பலருக்கும் காலம் பதில் சொல்லியுள்ளது. 2015.05.05 அன்று பன்னிரண்டு பாடசாலைகளின் பெயரில் காரைநகர் அபிவிருத்தி சபையும் இணைந்து நிரந்தர வைப்பில் இடப்பட்ட ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய்களிற்கு மேற்பட்டளவில் வங்கி வட்டி பணமாக காரைநகர் பாடசாலைகளிற்கு வழங்கி வருடாந்த அத்தியாவசிய அவசிய தேவைகளை பாடசாலை அதிபர்கள் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளதுடன், தற்போது 05.05.2022 முதல் 18% வட்டியுடன் தொடர்ந்து 12 பாடசாலைகளிற்கு வட்டிபணத்தை வழங்கி வருகின்றது. பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை இணைக்கப்பட்டதன் காரணமாக மேற்படி பாடசாலைக்காக வைப்பில் இடப்பட்ட பத்து இலட்சத்தின் வட்டிப்பணம் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலைக்கு வழங்கப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.


கடந்த வாரம் காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் இராமநாதன் அவர்களுடனும் செயலாளர் திரு.செந்தூரன் அவர்களுடனும் தொடர்பு கொண்ட போது காரைநகர் ஆரம்ப பாடசாலைகள் அனைத்தும் தம்மிடம் மேற்படி நிரந்தர வைப்பில் இருந்து பெறப்படும் வட்டிப்பணத்திற்கான வரவு செலவுகளை சமர்ப்பிப்பததாகவும் ஆனால் அதனை மேற்கொண்டு செயற்படுத்த கனடா காரை கலாசார மன்றம் தம்மோடு தொடர்பு கொள்வதில்லையெனவும், ஆனாலும் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அத்தியாவசிய தேவைகள் வருடந்தோறும் இதன்மூலம் பெறப்படும் வட்டிப்பணத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன எனவும் காரைநகர் ஆரம்ப பாடசாலை அதிபர்கள் இன்று சிற்சிறிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள எவரிடமும் கையேந்த வேண்டிய நிலையில் இல்லை எனவும் தெரிவித்தார்கள்.


கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளிற்கு ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்களை வழங்கிய அதே நிர்வாகத்தினரால் விட்டுச்செல்லப்பட்ட மேலும் 20,000 க்கும் மேற்பட்ட கனடிய டொலர்கள் 10.05.2015 அன்று பொதுக்கூட்டத்தை சீர்குலைத்து அடுத்த நிர்வாகத்தை தெரிவு செய்யவிடாமல் வரவு செலவு அறிக்கையினை நிராகரித்து வங்கிக்கணக்கை தொடர்ந்து ஒன்றரை வருடகாலமாக முடக்கியவர்கள் செயற்பாடுகளை காலம் கடந்தாவது கனடா வாழ் காரைநகர் மக்களே உணர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் அப்போது முடக்கப்பட்ட அதே 20,000 கனடியடொலர்களுடன் மேலும் 15,000 கனடிய டொலர்கள் 2017ம் ஆண்டு நிர்வாக சபையினரால் இலங்கை ஹட்டன் நாஷனல் வங்கியில் 50 இலட்சம் ரூபாய்கள் காரைநகர் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவென வைப்பில் இடப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டு 2018ம் ஆண்டு மார்கழி மாதம் கனடா காரை கலாசார மன்றத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கில் இலங்கையில் வைப்பில் இடப்பட்டது.


ஆனாலும் தொடர்ந்து கோவிட் பெருந்தொற்று காரணமாக இன்று வரை அதன் மூலம் பெறப்படும் வட்டி பணத்தின் ஊடாக எந்தவிதமாக கல்விப்பணி காரைநகரில் நிறைவேற்றப்பட்டது என்பதற்கான எந்தவிதமான தகவல்களும் கனடா காரை கலாசார மன்றத்தின் அங்கத்தவர்களிற்கு வழங்கப்படவில்லை. கனடா காரை கலாசார மன்றத்தின் பெயரில் இலங்கையில் மேற்படி 50 இலட்சம் ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு வைப்பாக கருதப்பட்டு மிகக்குறைந்தளவு வங்கி வட்டியே வழங்கப்பட்டு வந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளிற்கும் மேலாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகாரணமாக நிரந்தர வைப்பிற்கான வட்டி வீதம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் கனடா காரை கலாசார மன்றத்தின் தற்போதைய நிர்வாகம் அதனை காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் வைப்பிலிடவோ அன்றி மாற்று வழிகளை கைக்கொள்ளவோ எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென்பதுடன் காரைநகர் அபிவிருத்தி சபையினருக்கும் மேற்படி 50 இலட்சம் நிரந்தர வைப்பில் இருந்து பெறப்படும் வட்டி பணமோ அன்றி நிரந்தர வைப்பு தொடர்பான தகவல்களே தெரியாது எனவும் காரைநகர் அபிவிருத்தி சபையினர் தெரிவித்துள்ளனர்.


வெளிநாடுகளில் இருந்து செயற்படும் காரை மன்றங்களின் பல மில்லியன் ரூபாய்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் கடந்த பல காலமாக நிரந்தர வைப்பில் உள்ளதும், அதற்கான பெறப்படும் வட்டி பணம் அந்தந்த மன்றங்களின் வரவாக தனிப்பட்ட கணக்கில் தாம் வரவு வைத்துள்ளதாகவும் அந்த வட்டி பணத்தினை காரைநகர் அபிவிருத்தி சபை அந்தந்த மன்றங்களின் அறிவுறுத்தல்கள் இன்றி காரைநகர் அபிவிருத்தி சபை ஒருபோதும் தமது செலவிற்காக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் ஆனாலும் கனடா காரை கலாசார மன்றமானது காரைநகர் அபிவிருத்தி சபை மீது முழுமையான நம்பிக்கை கொள்ளவில்லையெனவும் அதன் காரணமாகவே மிகக்குறைந்தளவு வட்டியை பெற்றுத்தரும் வெளிநாட்டு கணக்கு நிரந்தர வைப்பில் ஹட்டன் நாஷனல் வங்கியில் 50 இலட்சம் ரூபாய்களை இட்டு வைத்துள்ளார்கள் எனவும் கவலையோடு தெரிவித்தார்கள்.


கனடா காரை கலாசார மன்றத்தில் கடந்த காலங்களிலும் சரி இன்றும் சரி நிர்வாக பதவிகளிற்கு வருபவர்கள் காரைநகர் அபிவிருத்தி சபையினரையோ அன்றி ஊரில் உள்ள எந்த பொது அமைப்புக்களையோ முழுமையாக நம்பிக்கை கொள்வதில்லை. ஒருவேளை தம்மைப்போலவே அந்த நிர்வாகங்களையும் நினைத்துக்கொள்கின்றார்களோ தெரியாது. கனடா காரை கலாசார மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையினரின் தற்போதைய கருத்து என்னவெனில் தமது நிர்வாக பதவி காலம் கடந்த வருடத்துடன் முடிந்து விட்டதாம். தமக்கும் மன்றத்தின் செயற்பாடுகளிற்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லையாம். பொழுது போக்கிற்காக ஊர்ப்பணி செய்ய புறப்பட்டவர்கள் ஒரு மன்றத்தின் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளிற்கு ஏன்வந்தார்கள் என்று உண்மையை சொல்லும் இந்த இணையத்தளத்திற்கும் தான் இன்னமும் புரியவில்லை.


காரைநகர் மண்ணுடனோ மக்களுடனோ தொடர்புடன் இருக்க முடியாவிட்டால் குறைந்த பட்சம் இலங்கை செய்திகளையாவது கிழமைக்கு ஒரு தடைவ செவிமடுத்தால் போதும் ஒரு ஊர் மன்றம் என்ன செய்ய வேண்டும் என்றும் அந்த மன்றத்தை எவ்வாறு வழி நடாத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்கள். ஊர் மன்றத்தினால் அறிந்து கொள்ள முடியாத ஒரு விடயத்தை UN வந்து சொல்ல வேண்டும். வடக்கு கிழக்கில் முன்பள்ளி சிறுவர்கள் போஷாக்கு குறைவால் கல்வி கற்ற முடியாத நிலையில் உள்ளார்கள் என்று கடந்த மார்ச் மாதம் “எனது ஊர் காரைநகர்” ஊடாக முன்பள்ளி சிறார்களின் நிலமையினை தெரிவித்திருந்தோம். அது மட்டுமன்றி வெறும் 40,000 ரூபா செலவில் ஒரு முன்பள்ளிக்கு சத்துணவு வழங்க முடியும் என தெரிவித்துடன் கடந்த நான்கு மாதங்களாக ஒரு முன்பள்ளிக்காக சத்துணவு வழங்கி வருகின்றோம்.


ஆனால் இன்று UN முதல் உலக சிறுவர் அமைப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் முன்வந்து முன்பள்ளி சிறுவர்களிற்கு சத்துணவு வழங்க முன்வந்துள்ள போதிலும் கனடா காரை கலாசார மன்றம் தமக்கு இன்னும் அப்படி எந்த வேண்டுகோளும் வரவில்லையாம். காரைநகரில் எல்லாரும் பெற்றோலுக்கும் டீசலுக்கும் லைனில நிக்கிறாங்கள் எண்டு நிர்வாகத்தை சேர்ந்தவர்களே என்னிடம் சொன்னார்கள். மேற்படி வார்த்தைகளோ கருத்துக்களோ “எனது ஊர் காரைநகர்” தொகுப்பாளர் தீசன் திரவியநாதனின் அல்ல பொறுப்பு மிக்க கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களின் கருத்தும் சொற்களும் ஆகும்.


‘எனது ஊர் காரைநகர்’ ஊடகம் சார்ந்து ஊரில் உள்ள தேவைகளை தெரியப்படுத்தி வருகின்றது. அதன் மூலம் எல்லா வகையிலும் எதிர்ப்புகளை மட்டுமே சம்பாதித்து வருகின்றது. வெளிநாடுகளில் உள்ள மன்றங்களும் ஊர்ப்பற்றாளர்களும் இவற்றை அறிந்து கொண்டால் மட்டுமே போதும் அதனை ஒரு பிரச்சனையாக அடையாளம் கண்டு கொண்டாலே போதும். சம்பந்தப்பட்டவர்கள், அரச இயந்திரங்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வார்கள். (மேலும் ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ பதிவுகள் Thiravianathan Theesan முகநூல் வாயிலாக பார்த்து அறிந்து கொள்ளலாம்)