இணைய வழி கற்றல் முறைக்காக காரைநகரை சேர்ந்த 50 மாணவர்களிற்கு மூன்று மாதங்களிற்கு Data வழங்கல் தொடர்பான அறிவித்தல்!காரைநகரில் வசதிகள் குறைந்த மாணவர்கள், அன்றாட கூலி தொழிலாளர்கள், வருமானமின்றிய குடும்பத்தை சேர்ந்த குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இணைய வழி கற்றல் முறையில் இணைந்து கொள்வதற்கு Data பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் Internet வாயிலாக கற்றல் முறையில் இணைந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக ஆசிரியர் ஒருவர் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


அதனையடுத்து மாதந்தோறும் மேற்படி குடும்பங்களை சேர்ந்த 50 மாணவர்களிற்கு இணைய வழி கற்கை முறையில் இணைந்து கொள்ள Data வழங்கப்படவுள்ளது. அடுத்த மாதம் ஒக்டோபர் மாதம் முதல் ‘எனது ஊர் காரைநகர்’ முயற்சியினால் இந்த வசதி செய்து கொடுக்கப்படவுள்ளது.


இணைய வழி மூலமாக கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தமது மாணவர்கள் யாராவது Data பெற்றுக்கொள்ள வசதியின்றி இணைய கல்வியில் இணைந்து கொள்வதில் சிரமத்தினை கொண்டுள்ளார்கள் என அறிந்தால் காரைநகரில் திரு.நிமலன் கணபதிப்பிள்ளை ஆசிரியரை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.


ஒக்டோபர் மாதம் முதல் அடுத்து வரும் மூன்று மாதங்களிற்கு மாதாந்தம் Data வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது.