கல்விக்கான உதவி! May 26, 2022காரைநகர் மாணவர்கள் இருவர் யாழ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று வருகின்றார்கள். காரைநகர் பெரியமணலை சேர்ந்த மாணவன் ஒருவரும் காரைநகர் வியாவில் பகுதியில் வசித்து வரும் மாணவன் ஒருவருக்கும் அவர்களது குடும்ப சூழ்நிலைகள் காரணமாக பல்கலைக்கழக கல்வியை தொடர்வதில் பெருத்த சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.


மேற்படி இரு மாணவர்களது குடும்ப சூழ்நிலைகளை நேரடியாக சென்று அறிந்து கொண்டதுடன் அவற்றினை உறுதிப்படுத்தும் வகையில் கிராம சேவகர் மற்றும் ஊரவர்கள் ஊடாகவும் உறுதிப்படுத்திக்கொள்ளப்பட்டது. மேற்படி இரு மாணவர்களும் வறுமையிலும் ஆர்வத்துடன் கல்வியை கற்று பல்கலைக்கழக தகுதியை அடைந்துள்ளனர். முதலாவது ஆண்டினை நிறைவு செய்துள்ள இவ்விரு மாணவர்களும் தாயின் பராமரிப்பில் மட்டும் வாழ்ந்து வருபவர்கள்.


குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பல்கலைக்கழக கல்விக்கு தேவையான நிதியினை இவர்களது குடும்பத்தினரால் வழங்க முடியாத நிலையிலும் தமது கல்விக்கான நிதியினை மட்டும் கொடுத்து உதவமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேற்படி இரு மாணவர்களிற்கும் ‘எனது ஊர் காரைநகர்” ஊடாக கடந்த ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு மாணவர்களிற்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததும் ஒரு சிலர் உதவ முன்வந்தனர். ஆனாலும் அந்த உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்கப்படவில்லையெனவும் ஒரு மாணவனுக்கு மட்டும் சிறிதளவு உதவி கிடைக்கப்பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.


இந்த நிலையில் மேற்படி இரு மாணவர்களிடமும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வியாவில் மாணவன் தனக்கு வருடம் ஒன்றிற்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் தந்து உதவினால் படிப்பினை தொடர முடியும் எனவும் மற்றைய பெரியமணல் மாணவன் தனக்கு மாதாந்தம் 10,000(பத்தாயிரம்) ரூபா தந்து உதவினால் கல்வியை தொடரமுடியும் எனவும் உறுதியளித்துள்ளனர். இதனடிப்படையில் வியாவில் மாணவனுக்கு முதல் கட்ட தொகையாக ரூபா 25,000வும் பெரிய மணல் மாணவருக்கு ஏப்ரல் மாத கொடுப்பனவாக ரூபா 10,000ம் ‘எனது ஊர் காரைநகர்” தனிப்பட்ட அனுசரணையில் வியாவில் ஐயனார் கோயில் தர்மகர்த்தாவினால் வழங்கப்பட்டுள்ளது.


மேற்படி இரு மாணவர்களிற்கும் வருடம் ஒன்றிற்கு தேவையான நிதியினை வங்கியில் வைப்பிலிட்டு தொடர்ந்து வியாவில் ஐயனார் கோயில் தர்மகர்த்தா மேற்பார்வையில் வழங்கப்படவுள்ளது. மேற்படி கல்விக்கான உதவிகளை வழங்க முன்வருபவர்கள் நேரடியாக ‘எனது ஊர் காரைநகர்” இணையத்தள தொகுப்பாளராகிய என்னை தொடர்பு கொள்ளவும்.


உங்களது உதவி மேற்படி இரு மாணவர்களையும் நேரடியாக சென்றடையும் என்பதுடன் உதவி வழங்க முன்வருபவர்களுக்கு மாணவர்களது விபரங்களும் வழங்கப்பட்டு தொடர்புகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்பதுடன் மேற்படி உதவியினை பெற்று இவ்விரு மாணவர்களும் பல்கலைக்கழக கல்வியை தொடர்வதை ஐயனார் கோயில் தர்மகர்த்தா மற்றும் “எனது ஊர் காரைநகர்” தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக்கொள்ளும் என்பதும் உறுதிப்படுத்திக்கொள்ளப்படுகின்றது.


“எனது ஊர் காரைநகர்” தொடர்ந்தும் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட கல்விக்கான உதவிகளையும் வசதிகளையும் காரைநகர் மாணவர்களிற்கு வழங்கி வருகின்றது. காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு வழங்கப்பட்ட போட்டோ கொப்பி இயந்திரத்திற்கு தேவையான பேப்பரினை கடந்த மார்ச் மாதம் ஒரு இலட்சம் ரூபா செலவில் 20 றீம் பேப்பர்கள் பெற்றுக்கொடுத்ததுடன் கடந்த டிசம்பரில் 50,000 ரூபா பெறுமதியில் பேப்பரும் வேண்டி வழங்கப்பட்டது.


அது மட்டுமன்றி ‘எனது ஊர் காரைநகர்” தொகுப்பாளரின் தனிப்பட்ட பல்வேறு கல்விக்கான உதவிகளும் அடிப்படை உதவிகளும் தொடர்ந்து காரைநகரில் பலருக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில் கல்விக்காக உதவும் சந்தர்ப்பமும் அதன் தர்ம பலன்களை ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தள வாசகர்களாகிய தாங்களும் பெற்று தங்களது ஏழேழு சந்ததிகளையும் கல்வியறிவோடு வாழ வைக்க கடவுளுக்கு கணக்கு கொடுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி! தொடர்புகளுக்கு: 416 821 8390