பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் கொரோனா காலத்திலும் ஊர்ப்பணி!
படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. படங்கள் நன்றி.சிவராசா கனகசுந்தரம்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் பொதுக்கூட்டம் 13.09.2020 கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது மிகவும் குறைந்தளவிலான பிரான்ஸ் காரை மக்கள் கலந்து கொண்டிருந்த போதிலும் தற்போதைய நிர்வாக சபை தலைவர் திரு.சோதிலிங்கம் பரமசிவம்பிள்ளை தலைமையில் காரைநகர் முன்பள்ளிகளின் முன்னேற்றம் கருதி கருத்துப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
காரைநகர் முன்பள்ளிகளின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட 2006ம் ஆண்டு முதல் செயற்பட்டு வருவதும் 10 இலட்சம் ரூபாய்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளதும் யாவரும் அறிந்ததே. இந்த நிலையில் 2016ம் ஆண்டு முதல் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் வங்கிக் கணக்கில் 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் நடைபெற்ற ‘காரை ஸ்வரங்கள்’ நிகழ்வின் போது சேமிக்கப்பட்ட நிதியான 4,000 யூரோக்கள் வரையான நிதி முடக்கப்பட்டிருந்ததும் இந்த இணையத்தளத்தின் மூலம் அறியப்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த யூலை மாதம் மேற்படி வங்கியில் இருந்த நிதி மீளப்பெறப்பட்டு மேற்கொண்டு 5 இலட்சம் ரூபாய்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் காரைநகர் முன்பள்ளிகளின் வளர்ச்சி கருத்தி நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் இதுவரை 15 இலட்சம் ரூபாய்கள் காரைநகர் முன்பள்ளிகளின் வளர்ச்சிக்காக காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக நிரந்தர வைப்பில் இட்டுள்ளது பொதுக்கூட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் முன்பள்ளிகளின் வளர்ச்சி கருதிய பணியில் தற்போதைய கொரோனா இடர் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு காரைநகர் முன்பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தலா 5,000 ரூபாய்கள் வீதம் 32 ஆசிரியர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வருட ஆரம்பத்தில் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் ஊடாக முன்பள்ளி சிறுவர்களிற்கான பாடப்புத்தகங்கள் ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் ரூபா செலவில் VS &Co நிறுவன உரிமையாளரும் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் பிரதான அனுசரணையாளருமான திரு.கோபாலகிருஸ்ணன் சின்னத்துரை(சந்திரன்) அவர்களின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் முன்பள்ளிகளின் நீண்ட கால வளர்ச்சி கருதிய திட்டத்தின் அடுத்த திட்டமாக தற்போது இதுவரை நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ள 15 இலட்சம் ரூபாய்களை 50 இலட்சமாக உயர்த்தி முன்பள்ளிகளின் தேவைகளிற்கு நிரந்தரமான தீர்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் காரைநகர் முன்பள்ளிகளின் வளர்ச்சியில் எடுத்து வரும் அக்கறை காரணமாக ‘எனது ஊர் காரைநகர்’, www.karainews.com இணையத்தளம் 2016ம் ஆண்டு தீசன் திரவியநாதன் தனிப்பட்டு 1000 யூரோக்களும், ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை வெளியீட்டின் மூலம் பெற்றுக்கொண்ட நன்கொடை 1500 யூரோக்களுமாக மொத்தம் 2500 யூரோக்கள் வழங்கியுள்ளதும் தொடர்ந்து ‘காரை ஸ்வரங்கள்’ நிகழ்வுகளின் போது தொடர்ச்சியான நிதியுதவியினை வழங்கி ஊக்குவித்து வருவதும் தற்பெருமையாக காரை நியூஸ் இணையத்தளம் இந்த இடத்தில் குறிப்பிப்பிடுவதும் தவிர்க்கமுடியாதது.
பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம் தற்போதைய நிர்வாக சபை விபரம் வருமாறு: