www.karainews.com


‘செய் அல்லது செத்து மடி’


  • Home
  • Alankanru
  • Kalundai Road Aug 2020
  • Karainagar People Photos
  • MaranaThiravianathan
  • FranceSep2020
  • MaranaSelvaratnamS
  • SivanMadalaymOct02
  • SivanOct09
  • SivanKovil 2020Oct13
  • SadayaliKovil2020Oct27
  • UniAdmission2020
  • Free land application
  • MaranaAlagan
  • MaranaShanmugampillai
  • NewMHO
  • KKnadarajahMaster
  • SportsClub2020
  • KalanithiSportsClub2020Dec
  • ThiruvembaPhotos
  • Poem 1
  • KalapoomyEducationDev
  • KaraiHinduJan2021
  • Payirikoodal2021Jan19
  • IndranNagalingam
  • LeelavathiVisvalingam
  • KalanithiSportsClubMarch2021
  • Kalanithi2Mar21
  • Sivan2021March12
  • 2021SivanMarch19
  • Jaffna Road Mar19,21
  • Sivan2021March25
  • Sivan25Mar2021
  • Sivan2021PankuniThear
  • Sivan2021PankuniUtharam
  • Sivan2021March28

காரைநகரில் கிராமிய விளையாட்டு மைதான அங்குரார்ப்பண நிகழ்வில் திரு.அங்கையன் இராமநாதன் 02.03.2021





இலங்கையில் நாடு பூராகவும் உள்ள 332 பிரதேச செயலக கிராமங்களில் இருந்து ஒவ்வொரு விளையாட்டுக்கழகங்களை தெரிவு செய்து அதற்கான மைதானத்தினை மேம்படுத்தும் அரசின் செயற்பாட்டில் காரைநகர் பிரதேச செயலகத்தில் கலாநிதி விளையாட்டுக்கழகத்தின் கரப்பந்தாட்ட மைதானத்தை மேம்படுத்த 15 இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் 02.03.2021 அன்று ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களிற்கு அவ்வப்பிரதேச செயலர்கள் நேரடியாக விஜயம் செய்து இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வைத்தார்கள்.


இந்நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலர், கிராம சேவகர், திரு.அங்கையன் இராமநாதன் அவர்களின் காரைநகர் அமைப்பாளர் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்து கொண்டு பெயர் பலகையினை திறந்து வைத்தார்கள்.


காரைநகர் பிரதேச செயலகத்தில் இருந்து கலாநிதி விளையாட்டுக் கழகத்தினை தெரிவு செய்து கரப்பந்தாட்ட மைதானத்தை மேம்படுத்த மேற்படி திட்டத்தின் மூலம் 15 இலட்சம் ரூபாய்களை ஒதுக்கியுள்ளார் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்கள். நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருக்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்கள் 02.03.2021 திங்கட்கிழமை காரைநகர் கலாநிதி விளையாட்டுக்கழகத்தின் அழைப்பை ஏற்று மாலை 7 மணியளவில் கலந்து கொண்டு கரப்பந்தாட்ட மைதான மேம்படுத்தல் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.



WWW.KARAINEWS.COM