களபூமி கல்வி அபிவிருத்தி கழகம் ஆரம்பம் 10.11.2019காரைநகர் களபூமி கல்வி அபிவிருத்தி கழகம் 2019.11.10 அன்று நடைபெற்ற பொதுக்கூட்த்தின் போது உதயமானது. அன்றைய பொதுக்கூட்டத்தின் போது திரு.குலசேகரம்பிள்ளை சிவஞானம் அவர்கள் தலைவராகவும், திரு.பொன்னம்பலம் சிவானந்தன் செயலாளராகவும், திரு.கணேசபிள்ளை விஜயகுமார் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.


மேலும் எண்மர் நிர்வாக அங்கத்தவர்களாகவும் மேலும் எண்மர் போசகர்களாகவும் தெரிவு செய்யப்பட்டதோடு, கல்வி ஆலோசனைக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு 10 கல்வியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.


களபூமி கல்வி அபிவிருத்தி கழகத்தின் உதயத்தின் பின்னர் இலண்டனில் வாழும் களபூமி இளைஞர்கள் உதவியுடன் முதற்கட்டமாக 50 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இடப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வங்கி வட்டி ஊடாக களபூமி பகுதி மாணவர்களின் கல்விப்பணியில் ஈடுபடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


அதன் பிரகாரம் கடந்த டிசம்பர் 2020 வரை சேர்க்கப்பட்ட நிதியான 35 இலட்சம் ரூபாய்கள் வரை நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளதாக களபூமி கல்வி அபிவிருத்தி கழகம் அறிவித்துள்ளது.

மேலும் தொடர்ந்து இவ்வமைப்பிற்காக நிதி உதவி வழங்க தமது பெயர்களை இணைத்துக்கொண்டவர்களிடமிருந்தும் நிதி பெறப்பட்டு இந்நிரந்தர வைப்பில் சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக்கொண்டுள்ளது.


களபூமி கல்வி அபிவிருத்தி கழகம் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ள ஓர் அறிவித்தலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2019.11.10 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் புகைப்படங்களும் ஏற்கெனவே இந்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும் மீண்டும் எடுத்து வரப்பட்டுள்ளன.