காரைநகர் இந்துக் கல்லூரி தெற்கு வளாக வகுப்பறை கட்டிடம் Condemned!
காரை இந்துவின் வரலாற்றில் என்றும் எப்போதும் மறைக்கவோ அன்று மறுக்கவோ முடியாத அதிபராக திகழ்ந்த கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் முயற்சியினால் கட்டப்பட்டு கடந்த ஆறு தசாப்தங்களிற்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த இரட்டை மாடிகளைக்கொண்ட வகுப்பறை கட்டிடம் கடந்த ஆண்டு முதல் பயன்படுத்த முடியாதளவில் கல்வித்திணைக்களத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளது.
1959ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டதும் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் முயற்சியினால் மலேசியா வாழ் காரை மக்களிடமும் தனது சொந்த நிதியினாலும் கட்டி முடித்த பத்திற்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கொண்ட, 1960ம் ஆண்டுகளிலே இரட்டை மாடிகளைக்கொண்ட பெருமைக்குரிய பாடசாலையாக திகழ்ந்த காரை இந்துவின் சின்னமாக திகழும் கட்டிடம் கடந்த ஒரு வருடமாக தடைசெய்யப்பட்ட கட்டிடமாக திகழ்கின்றது.
இடிந்து விழும் கொங்கிறீட் மற்றும் துருப்பிடித்த தூண்களின் கம்பிகள் என பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த கட்டிடம் கல்வித்திணைக்கழத்தினால் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளிற்கு அமைய தடைசெய்யப்பட்ட கட்டிடமாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக மேற்கொண்டு கல்வித்திணைக்கழமே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என பாடசாலை நிர்வாகமும். இந்த நிலமையினை அறியாத நிலையில் கல்விச் சமூகமும் காரைநகரிலும் காரைநகரிற்கு வெளியேயும் ஊர்ப்பணி செய்து கொண்டிருக்கின்றார்கள். (கீழே எடுத்து வரப்பட்டுள்ள கட்டிடத்தின் புகைப்படங்கள் கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டவை, படங்களை க்ளிக் செய்வதன் மூலம் பெரிதாக பார்வையிடலாம்.