கனடா காரை கலாசார மன்றத்தின் அளப்பரிய சாதனை..!காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கான பயிற்சி புத்தகங்கள் கடந்த சில வருடங்களாக கோரப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவில் நடைபெற்ற ‘காரை வசந்தம்’ நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதியில் இருந்து நிறைவேற்றப்படும் என கனடா காரை கலாசார மன்றத்தின் தற்போதைய நிர்வாகத்தினரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 21.06.2021 இந்த வாரம் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக 65,000 ரூபா பெறுமதியான பயிற்சி புத்தகங்கள் கனடா காரை கலாசார மன்றத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் அதற்கு முன்னரும் மாணவர் நூலகத்திற்கு, மாணவர்களின் தேவைகளிற்காக அத்தியாவசிய தேவையாக கருதப்பட்ட பயிற்சி புத்தகங்களை பெற்று வழங்க உறுதியளிக்கப்பட்ட போதிலும் காரைநகர் அபிவிருத்தி சபையினரின் அசமந்த போக்கினால் இதுவரை காலமும் இச்செயற்பாடானது நிறைவேற்றபடமுடியாமல் இருந்துள்ளதாக கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.


அது மட்டுமன்றி காரைநகர் பாடசாலைகளின் தேவை கருதி காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு Heavy Duty போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றும் ஐந்து இலட்சம் ரூபா செலவில் பெற்று வழங்குவது என்றும் தொடர்ந்து வருடந்தோறும் அதற்கான பராமரிப்பு மற்றும் காகிதாதிகள் செலவாக ஒரு இலட்சம் ரூபாய்கள் வரை செலவு செய்யப்படும் எனவும் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தினரால் ‘காரை வசந்தம் 2019’ க்கு முன்னர் உறுதியளிக்கப்பட்டிருந்தது.


2019ம் ஆண்டிற்கு முன்னரே பல பாடசாலைகளிற்கு போட்டோ கொப்பி இயந்திரத்தின் தேவை அத்தியாவசியமானதாக இருந்துள்ளது. காரைநகரில் இயங்கும் 11 பாடசாலைகளில் எட்டு பாடசாலைகள் கடந்த வருடம் தனிப்பட்ட வகையில் தமக்கான சிறிய ரக போட்டோ கொப்பி இயந்திரத்தை தனிப்பட்ட நபர்கள் ஊடாகவும் சக்தி இலவசக்கல்வி நிர்வாகத்தின் ஊடாகவும் பெற்றுள்ளனர்.


2021 ஏப்ரல் மாதமளவில் கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா செலவில் சிறிய ரக போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கப்பட்டது. பாடசாலைகளின் தேவைக்காகவும் மாணவர்களின் தேவைக்காகவும் Heavy Duty போட்டோ கொப்பி இயந்திரம் பெற்று வழங்க தீர்மானித்திருந்த போதிலும் தனிப்பட்ட தேவைகளிற்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக போட்டோ கொப்பி இயந்திரத்தின் மூலம் மாணவர்களின் தேவைகளை இதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியாது என்பதும் அதற்குரிய வலு இல்லாத இயந்திரம் என்பதும் கடந்த இரண்டு மாதங்களில் தெரிய வந்துள்ளது.


காரைநகர் பொது முடக்கத்திற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே பாடசாலையை சேர்ந்த ஆசிரியர்களினால் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட பிரதிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காரைநகர் அபிவிருத்தி சபையினரால் விசனமும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போனால் தற்போது கனடா காரை கலாசார மன்றத்தினரால் வேண்டி வழங்கப்பட்ட போட்டோ கொப்பி இயந்திரம் பாடசாலைகள் திறக்கப்பட்டால் ஆறுமாதகாலம் கூட தாக்கு பிடிக்காது என்பது தெரிந்ததே. அத்துடன் தற்போது மாணவர் நூலகத்தில் உள்ள போட்டோ கொப்பி இயந்திரத்தில் பிரதி எடுக்க மாணவர்களிற்கு அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அறியப்படுகின்றது.


மாணவர் நூலகத்தின் தேவையறிந்து நேரடியாக காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் மூலமும் காரைநகர் ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை நேரடியாக கேட்டறிந்து கொண்ட ‘எனது ஊர் காரைநகர்’ 16.06.2021 அன்று காரைநகர் மாணவர் நூலகத்திற்கு Heavy Duty போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றை 5 இலட்சம் ரூபா செலவில் பெற்று வழங்கவும் பாட பயிற்சி புத்தகங்களை பெற்று வழங்கவும் உறுதியளித்தது. 21.06.2021 இந்த வாரம் கனடா காரை கலாசார மன்றம் 85,000 ரூபா அட்டை விலை பெறுமதியான புத்தகங்களை 65,000 ரூபா செலவில் விலைக்கழிவு பெற்று வழங்கியுள்ளது.


தற்போதைய கொரோனா சூழ்நிலையினால் பாடசாலைகள் இயங்காத நிலையில் மேலும் பயிற்சி புத்தகங்கள் கூடிய தொகையில் பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் கனடா காரை கலாசார மன்றம் ஒரு இலட்சம் ரூபாய்கள் வரையான நிதியினையே ஒதுக்கியுள்ளதும், மேலும் மாணவர்களின் தேவைகளிற்கு ஏற்பவும் மேலும் இன்னமும் பெறப்படாத பயிற்சி புத்தகங்கள் கொழும்பில் இருந்தும் பெறப்பட வேண்டியுள்ளதால் ‘எனது ஊர் காரைநகர்’ வழங்கிய உறுதியின் அடிப்படையில் தேவையான அனைத்து புத்தகங்களும் மேலும் விபரங்கள் பெற்று வழங்கவும் பெற்றுக்கொள்ளப்பட்ட புத்தகங்களின் தேவைகருதி கூடிய தொகையில் அவற்றை பெற்று வழங்கவும், Heavy Duty போட்டோ கொப்பி இயந்திரம் பெற்று வழங்கவும் தொடர்ந்து காரைநகர் அபவிருத்தி சபை மாணவர் நூலக குழு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆலோசனைகளை பெற்று வருகின்றது ‘எனது ஊர் காரைநகர்’.


இந்த நிலையில் 16.06.2021 அன்று ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் மூலம் விடுக்கப்பட்ட அறிவித்தலையடுத்து காரைநகர் மாணவர்களின் கல்வியில் அக்கறையும் கருசரணையும் உள்ள கொடையாளர்களால் இதுவரை மூன்று இலட்சம் ரூபாய்கள் வரை கிடைக்கப்பெற்றுள்ளன. கிடைக்கப்பெறும் நிதி உடனடியாக காரைநகர் அபிவிருத்தி சபையினருக்கு அனுப்பப்பட்டு நிதி உதவி வழங்கியவர்களின் பெயரிலேயே காரைநகர் அபிவிருத்தி சபை ரசீது வழங்கப்படும்.


மேலும் போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் மேலதிக பயிற்சி புத்தகங்கள் மற்றும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை காரைநகர் அபவிருத்தி சபை மாணவர் நூலக குழு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆலோசனைகளை பெற்று நிறைவேற்ற மேலும் 4 இலட்சம் ரூபாய்கள் வரை தேவையுள்ளது. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். ‘எனது ஊர் காரைநகர்’ எடுத்துக்கொள்ளும் எந்த முயற்சிகளும் வீண் போவதில்லை.

நன்றி! -

‘எனது ஊர் காரைநகர்’

25.06.2021