காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் இராமநாதன் அவர்களது சொந்த நிதி 6 இலட்சத்து நாற்பத்து எட்டாயிரம் ரூபா செலவில் DIGITAL INteraCTIVE BOARD
08.07.2021 இன்று வியாழக்கிழமை வேண்டி கொடுக்கப்பட்டுள்ளது08.07.2021 வியாழக்கிழமைகாரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகம் தொடர்பாக ‘எனது ஊர் காரைநகர்’ இந்த இணையத்தளம் ஊடாக கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுகள் ஊடாக பலவித சர்ச்சைகளை விதண்டாவாதிகள் ஏற்படுத்தி வந்துள்ளனர்.
அதன் காரணமாக 07.07.2021 அன்று காரைநகர் அபிவிருத்தி சபையினர் நிர்வாக சபை கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர். இந்த நிலையில் காரைநகர் மாணவர்களின் கற்றல் தேவைகளை அறிந்து கொண்டும் தற்போதைய கொரோனா சூழ்நிலையினையும் கருத்தில் கொண்டு Digital Interactive Board ஒன்றினை தனது சொந்த நிதியில் இருந்து வேண்டுவதாக காரைநகர் அபிவிருத்தி சபையின் தலைவர் நேற்றைய தினம் அதிரடியாக அறிவித்திருந்தார்.

அதனிலும் ஆச்சரியமாக இன்றைய தினம் 08.07.2021 அதனை பெற்று காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திலும் பயன்பாட்டுக்கு உரிய வகையில் ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. Digital interactive Board எனப்படுவது Computer, Smart phone, projector போன்று அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய touch screen முறை மூலம் இலகுவாக இயக்க கூடியது. இதன் மூலம் Zoom வகுப்புகளை நடாத்த முடியும்.

இன்றைய தினம் உடனடியாக காரைநகர் சுகாதார உத்தியோகத்தருக்கும் அறிவிக்கப்பட்டு, ஆகக்கூடியது 20 மாணவர்கள் ஒரே நேரத்தில் Zoom வகுப்புகளில் பங்குபற்றவும் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும்அறியப்படுகின்றது. 75 இன்ஞ் screen கொண்ட இந்த Digital Interactive Board மூலம் தற்போது தீவக வலய மாணவர்களிற்கான Zoom மூலம் நடாத்தப்படும் கற்றல் செயற்பாடுகளில் கலந்து கொள்ள உடனடியாக காரைநகர் மாணவர்கள் காநைகர் அபிவிருத்தி சபை நூலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக ஆறு இலட்சம் ரூபா செலவில் மாணவர் நூலகத்திற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள Digital Multifunctional Printer ‘எனது ஊர் காநைகர்’ இணையத்தளத்தினால் நேரடியாக ஓடர் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரமளவில் அதுவும் செயற்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன் மூலம் Zoom வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களிற்கு, பாடங்களின் போது கொடுக்கப்படும் குறிப்புக்கள்(Notes) wireless மூலம் பிரதி செய்யக்கூடிய ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்தின் உதவியினால் வேண்டி கொடுக்கப்படவுள்ள போட்டோ கொப்பி இயந்திரத்தின் மூலம் தேவையானளவு பெற்றுக்கொள்ளவும் வசதி ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இயங்கும் காரை அமைப்புக்களின் அசமந்த போக்குகளினாலும் காரைநகர் மாணவர்களின் தேவைகளை தற்போதைய கொரோனா சூழ்நிலையின் போதும் தமாக முன்வந்து கண்டு கொள்ள முடியாத நிலையில் ‘எனது ஊர் காரைநகர்’ முன்னெடுத்த விழிப்புணர்வின் மூலம் குறுகிய காலத்தில் காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகம் பலவித வசதிகளை பெற்று வருகின்றது என்பதும் மேலும் பலர் தனிப்பட்ட வகையில் காரைநகர் மாணவர் நூலகத்திற்கு மேலும் பல உதவிகளை வழங்க முன்வந்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

அத்துடன் காரைநகர் மாணவர் நூலகத்திற்கு காரைநகர் மாணவர்களின் நலன்கருதி அன்பளிப்பாக வழங்கப்படும் கற்றலுக்கான உபகரணங்களை பெற்றுக்கொள்ளவதில் எந்தவித தடையும் இல்லையெனவும், ஒரு சிலர் எதற்கும் லாயக்கற்ற வகையிலும் எந்தவித இலட்சியமும் அற்ற வகையில் காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு ‘அவரிடம் கேட்டீர்களா?, இவரிடம் கேட்டீர்களா?, அவர் ஏன் வேண்டி தரவேண்டும்..? இவர் ஏன் வேண்டி தரவேண்டும்...?’ என சர்ச்கைகளையும் வதந்திகளையும் ஏற்படுத்தியவர்கள் வெறும் வெத்து வேட்டுக்கள் என்பதும், காரணம் இன்றி அடுத்தவர்கள் மேல் காயும் உள்ளங்கொண்டவர்களே என்பதையும் காரைநகர் அபிவிருத்தி சபையினர் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு விதண்டாவாதம் கொண்டு சிலர் செயற்பட்டு வருவதன் ஊடாகவே செய்திகளும் சொல்லப்படும் வேகத்திலும் பார்க்க விரைவாக விழிப்புணர்வை கல்வியாளர்களிற்கு மத்தியில் ஏற்படுத்தி வருவதையும், ஊரிற்காக உதவ மனமில்லாதவர்களும் பொறாமை நோக்கம் கொண்டவர்களும் எப்போதும் போல் அடுத்தவனை எப்படி கெடுக்கலாம் என சிந்தித்துக்கொண்டிருப்பதையும் செயற்பாடுகள் நிரூபித்து காட்டுகின்றன.

அது மட்டுமன்றி ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் உலகளாவிய காரைநகர் மக்களிற்கு விளக்கத்துடனும், விபரத்துடனும் உண்மையான செய்திகளை தெரிவிக்கும் வகையில் ஊடகமாகவோ அன்றி உதவியாளராகவோ காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாக உறுப்பினர்களை தொடர்பு கொள்வதில் கூட பலருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தி வருகின்றது.

‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்திற்கு செய்தி கொடுப்பது யார்?, ஏன் கொடுக்க வேண்டும்..? என நிர்வாக உறுப்பினர்களிற்கும் சங்கடங்களை உண்டுபண்ணி உண்மையை மறைக்கும் வகையிலும் ஒன்றை பத்தாகவும், அடுத்தவர்கள் பணத்தில் தாம் குளிர்காய நினைக்கும் சிலருக்கு மத்தியில் ‘எனது ஊர் காரைநகர்’ விளக்கமாக விபரமாக பணம் கொடுத்தவர்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள் என்ற விபரமும் வெளியிடுவதில் சிலருக்கும் தங்கள் பருப்பு வேகாத நிலையில் வயிறு எரிந்து கொள்கிறார்கள்.

குறிக்கோளும் இலட்சியமும் சரியாக இருந்தால் நினைப்பதை விட சிறப்பாக செயற்படுத்தி வைப்பான் எல்லாம் வல்ல இறைவன்.