ஆத்ம சாந்தி அஞ்சலி!
அமரர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்
மறைவு: 08.09.2020கல்விப்பணியில் ஓய்வு காலத்திலும் ஓயாமல் செயற்பட்ட உன்னத புருஷர். இடம்பெயர்ந்த காலத்தில் இடர்களின் மத்தியிலும் ஆர்வமுடன் மாணவர்களின் கல்வியில் நாட்டமுடன் தனது பணிகளை தவறாது செய்துகொண்ட உத்தமர்.


வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது என்ற கொள்கையுடன் பெருமைக்காகவோ அன்றி பெயருக்காகவோ அல்லாது பேருவைகையுடன் செயற்பட்ட கல்வியாளன். அமைதியானவர், அன்பானவர், அனைவரையும் அரவணைத்து செல்லும் ஆசான் பொன்னம்பலம் மாஸ்ரர் இயற்கையெய்தினார் என்ற செய்தி கவலைகொள்ள வைத்தது.


அன்னாரது புனித ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருப்பாதங்களை சென்றடைய ‘எனது ஊர் காரைநகர்’ அபிமானிகள் சார்பாகவும், எனது தந்தையார் பொன்னையா திரவியநாதன் அவர்களின் கூடப்படித்த வகுப்பு தோழனின் மகனாகவும், அன்னாரது மகன் அருளழகன் அவர்களுடைய காரை இந்துவின் வகுப்பு நண்பனான தீசன் திரவியநாதன் ஆகிய எனதும் பிரார்த்தனைகள் உரித்தாகுக. மரண அறிவித்தல் மற்றும் விபரங்களுக்கு www.karainagar.com

இணையத்தளத்திற்கு செல்க.