மரண அறிவித்தல்
திருமதி லீலாவதி விஸ்வலிங்கம்
நடுத்தெரு, காரைநகர்(இலண்டன்)
மறைவு: 15.02.2021இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் இணைக்கப்பட்டுள்ளது

காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் இலண்டன் Aylesbury வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி லீலாவதி விஸ்வலிங்கம் அவர்கள் 15.02.2021 திங்கட்கிழமை இலண்டனில் இறைவனடி எய்தினார்.


அன்னார் காலஞ்சென்ற கந்தையா - மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து – கமலம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் (முன்னாள் உரிமையாளர் நியூ விஜயா ஸ்ரோர்ஸ் - யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,


காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, சுந்தரமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற நடராசா மற்றும் தனநாயகி, காலஞ்சென்றவர்களான குணவதி, தனலட்சுமி, தனபாலன் ஆகியோரின் மைத்துனியும்,


சசிகலா(இலண்டன்), விஜயேந்திரன்(இலண்டன்), பரந்தாமன்(கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும், ரவீந்திரன், பரமேஸ்(உஷா), செல்வராணி ஆகியோரின் மாமியாரும்,


சபோசினி- கிருஷ்நாத், சர்மிலன், யஸ்மிலன், ரம்யா, யாமினி, அஷ்வினி, ஹிரண்யா, ஹர்ணி, நிதேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.02.2021 ஞாயிற்றுகிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரையும் Divinity Funeral Care, 209 Kenton Road, Harrow, Middlesex, HA3 0HD என்ற முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு,


பின்னர் காலை 10 மணி முதல் 11 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று Golders Green Crematorium Hoop Lane, Golders Green, London, NW11 7NL என்ற முகவரியில் அமைந்துள்ள சேமக்காலையில் தகனம் செய்யப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

சசிகலா ரவீந்திரன்(மகள்- இலண்டன்): 44 075 517 57970 விஜயேந்திரன்(மகன்- இலண்டன்): 44 075 787 63402 பரந்தாமன்(மகன்- கனடா): 011 647 938 3332