கண்ணீர் அஞ்சலி!
திருமதி நாகராஜா காமாட்சி
மறைவு: 25.06.2021

திருமதி நாகராஜா காமாட்சி காரைநகர் மேற்கு வாரிவளவை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டுமாமா) அவர்களின் சகோதரியுமான திருமதி நாகராஜா காமாட்சி அவர்களின் மறைவு கேட்டு கனடா வாழ் காரைநகர் மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம்.


திருமதி நாகராஜா கமாட்சி அவர்கள் கனடாவில் தனது பிள்ளைகளுடன் பல ஆண்டுகளாக வசித்து வந்த போதிலும் காரை மண்ணின் மீதும் காரை மக்களின் மீதும் மிகுந்த பற்றுடன் வாழ்ந்து வந்தவர். பட்டுமாமா என காரைநகர் மக்களால் அன்போது அழைக்கப்பட்ட அமரர் சரவணமுத்து பத்மநாதன் அவர்களின் சகோதரியான அமரர் காமாட்சி அம்மா அவர்கள் தனது சகோதரரின் வழிநின்று காரைநகர் மண்மீது அளவிலா பற்றுடன் தனது வயோதிப காலத்திலும் தனது ஆதரவையும் அன்பையும் செலுத்தி வந்தவர்.


அதே போன்று மண்மீது கொண்ட அளவிலா பக்தியினால் கடந்த வருடம்(2020) ஆரம்ப காலத்தில் தனது தள்ளாத வயதிலும் தான் பிறந்த மண்ணையும் மக்களையும் தரிசிக்க எண்ணி சென்று கடந்த பல மாதங்களாக தான் பிறந்த மண்ணின் சுகந்தத்தை அனுபவித்து வந்தார்.


கடந்த ஒரு சில நாட்கள் மட்டுமே வயது முதிர்ச்சியின் காரணமாக சுகஜீனமுற்றிருந்து 25.06.2021 வெள்ளிக்கிழமை தான் பிறந்த காரைநகர் வாரிவளவு மண்ணில் இறைவனடி எய்தினார். அன்னாரது இறுதிக்கிரியைகளும் அதே தினம் நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது.


அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அன்னாரது பிள்ளைகளான சூரியகுமார்(London), மனோகுமார்(London), சூரியகுமாரி(Canada), வசந்தகுமாரி(London), ராஜ்குமார் (Holland), சாந்தகுமாரி(Canada), இரத்னகுமார்(Canada), றஞ்சித்குமார்(Holland), திருமதிசூரியகுமாரி அவர்களிற்கும் மருமக்களிற்கும் பேரப்பிள்ளைகளிற்கும் உற்றார் உறவினர்களிற்கும் ஊரவர்களிற்கும் எமது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.


மேலதிக தொடர்புகளுக்கு: மகள் திருமதி சூரியகுமாரி 001(437)771-3930 CANADA