மரண அறிவித்தல்



திருமதி பேரம்பலம் கனகாம்பிகை





காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், நீலிப்பந்தனையை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி பேரம்பலம் கனகாம்பிகை அவர்கள் 24.09.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன்(S.A.நாதன் - முன்னாள் இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், மெமோறியல் கல்லூரி, மானிப்பாய்) மற்றும் அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(கட்டட ஒப்பந்த மேற்பார்வையாளர், காரைநகர்) தங்கமுத்து தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற முன்னாள் புகையிரத நிலைய அதிபர்(மருதானை) பேரம்பலத்தின் அன்பு மனைவியும்,


காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(இலங்கை சிவில் சேவை தலைமை உத்தியோகத்தர், சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு – கொழும்பு), நடராசா(முன்னாள் இளைப்பாறிய அதிபர், காரைநகர் இந்துக்கல்லூரி, யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி), குமாரசாமி(விவசாய போதனாசிரியர், பேராதனை பல்கலைக்கழகம் - கண்டி), கந்தசாமி(முன்னாள் மாணவன், பேராதனை பல்கலைக்கழகம் - கண்டி), ஞானாம்பிகை, அகிலாம்பிகை, மற்றும் மகாதேவன்(இளைப்பாறிய வருமான வரி உத்தியோகத்தர்-கொழும்பு, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,


சந்திரசோதி, பரமேஸ்வரி, சரஸ்வதி, புனிதவதி, காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் திருக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற தியாகராசா மற்றும் சிவநாதன், வன்னியசிங்கம், சுப்பிரமணியம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசநாயகம்(முன்னாள் இளைப்பாறிய கணக்காளர், பட்டினசபை-மன்னார்) மற்றும் செல்வநாயகம்(இளைப்பாறிய கணக்காளர், புள்ளி விபரத்திணைக்களம் - கொழும்பு), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பரஞ்சோதி மற்றும் ஜெயமணி, காலஞ்சென்றவர்களான திரவியநாதன், கருணாகரன் (இளைப்பாறிய இரசாயணவியல் ஆசிரியர்-யாழ்ற்ரன் கல்லூரி) மற்றும் சிவானந்தவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,


வாசுகி-தர்மகுலசிங்கம், சத்தியராணி-மகேஸ்வரன், கவிதா-ரகுபதி,

கௌசல்யா-கணேசானந்தன், மதிவதனன்-தனேஸ்வரி, சிவதர்மினி-கோகுல்ராஜ், பகீரதி-அருண், ஜனனி-கஜேந்திரன்(பட்டதாரி உத்தியோகத்தர், சுற்றாடல் அதிகாரசபை-மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), மயூரி(மாணவி-மருத்துவ பீடம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), லோகநவநீதன்(மாணவன்-கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்), தினேஷ்(மென் பொறியியலாளர்), துவாரகா(மருந்தாளர்), துஷானி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,


சரண், திவ்வியா, மதுரா, பிரணவன், பவிஷன், மகிஷா, தனுக்ஷன், மதுஷன், அபிக்ஷன், அஸ்விக்கா, அஸ்வியா, ஆதிரன், அனன்யா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை மு.ப.11.00 மணியளவில் வவுனியாவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.


தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு: நேரடி மற்றும் Viber திருக்குமார் (மகன்) : +33 617 684 864