கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்!
10.01.2022 அன்று கலாநிதி கெனடி விஜயரத்தினம் அவர்கள் மறைவின் 4ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு காரைநகரிலும் யாழிலும் நிகழ்வுகள் நடைபெற்றன. கென்னடி அவர்களின் ஞாபகர்த்தமாக காரைநகர் இந்துக்கல்லூரி நடராஜா ஞாபகர்த்த மண்டபத்திற்கு ஒலி அமைப்பு கருவிகளை அன்னாருடைய சகோதரரும் ஜேர்மன் காரை நலன்புரிச்சங்கத்தின் உபதலைவரும் அவ்வமைப்பின் நிறுவுனர்களில் ஒருவருமான திரு.அருள்முகன்சாயிபாபா விஜயத்தினம் அவர்கள் இரண்டு இலட்சத்து அறுபது ஆயிரம் ரூபா செலவில் அன்பளிப்பு செய்துள்ளார். அத்துடன் அமரர் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் கலையிலும் கலை வளர்ச்சியிலும் காட்டி வந்த பெரும் அக்கறையினை எடுத்தியம்பும் வகையில் அன்னாரது ஞாபகர்த்தமாக வடமாகாண பாடசாலைகளிற்கு இடையிலான தனிநடிப்பு போட்டியினை வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயல்திறன் அரங்க இயக்கமும் நடாத்தி நாடகங்கள் மேடையேற்றமும் பரிசளிப்பு நிகழ்வும் காரைநகர் இந்துக்கல்லூரி நடராஜா ஞாபகர்த்த மண்டபத்தில் 10.01.2022 அன்று நடைபெற்றது.