ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயிலில் 19.03.2021 முதல் நடைபெற்றுவரும் சிவன் பங்குனி மகோற்சவ இரவு திருவிழா காட்சிகள்....!
ஈழத்து சிதம்பரம் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக 03.03.2021 அன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்காக ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதியினால் தற்காலிக தீர்பாக ஈழத்து சிதம்பரத்தின் நிர்வாகத்தில் ஆதீனகர்த்தாக்களாக திரு.முருகேசு சுந்தரலிங்கம், திரு.ஆண்டிஐயா அம்பலவிமுருகன் ஆகிய இருவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அதற்கான சில நிபந்தனைகளை விதித்ததுடன் அவ்வாறு செயற்பட தவறும் பட்சத்தில் ஈழத்து சிதம்பரம் நிர்வாகம் அரச பெறுனர் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பங்குனி மகோற்சவ காலத்தில் நிதி செயற்பாடுகள் எவ்வாறு நடைபெறவேண்டும் எனவும் நீதிபதியினால் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திரு.முருகேசு சுந்தரலிங்கம், திரு ஆண்டிஐயா அம்பலவிமுருகன் ஆகியோர் சம்மதித்திருந்ததுடன் அதனையே செயற்படுத்தவும் தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் மரண தொடக்கு காரணமாக இருவரும் தற்போது நடைபெற்று வரும் பங்குனி மகோற்சவத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தற்காலிக தீர்ப்பின் முழுவடிவம் இந்த இணையத்தளத்திற்கு கிடைக்கப்பெற்ற போதிலும் அதனை காரைநகர் மக்களிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் பணத்திற்காக காரைநகர் மக்களின் ஆன்மீகம் கொச்சைப்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் அதனை இந்த இணையத்தளம் எடுத்து வரவில்லை.
இந்த நிலையில் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்களிற்கும் அப்பால் இறைவன் தீர்ப்பாக காரைநகர் மக்களின் ஆன்மீகம் இறைவனால் காப்பாற்றப்பட்டுள்ளது.
காரைநகர் மக்கள் இதனை புரிந்து கொண்டால் ஈழத்து சிதம்பரம் காரைநகர் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக ஆன்மீக தலமாக எதிர்காலத்திலும் திகழும்.