ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ தேர்த்திருவிழா 27.03.2021 சனிக்கிழமை நடைபெற்றது.
கொரோனா சூழ்நிலை காரணமாக பஞ்சரதங்களிற்கு பதிலாக சிவனின் சித்தி தேரில் சோமாஸ்கந்த பெருமானுடன் பரிவார மூர்த்திகள் ஒரே தேரில் மூன்றாம் வீதியாம் மாமணி வீதியில் உலா வந்து அருள்பாலித்தார்.
அதனைத்தொடர்ந்து 28.03.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பங்குனி உத்தரத்தை முன்னிட்டு தில்லைக்கூத்தன் தில்லை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்று காலையில் மூன்றாம் வீதி உலாவும் நடைபெற்றது. தில்லைக்கூத்தன் அடியவர்கள் பயபக்தியோடு கலந்து கொண்டு எம்பெருமான் அருள் பெற்றனர்.