ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலயத்தில் வழமையாக வருடாந்த பொதுக்கூட்டமும் கணக்கறிக்கை சமர்ப்பித்தலும் நிர்வாக சபை தெரிவும் வருடந்தோறும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெற்று வந்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடத்திற்குரிய கணக்கறிக்கை சமர்ப்பித்தலும் தற்போதைய மடாலயத்தின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கலந்துரையாடலுக்கும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11.10.2020 அன்று நாட்குறிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் வெளியாகும் நாளிதளில் மணிவாசகர் மடாலயத்தின் தலைவரினால் அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு மேற்படி கூட்டம் நடாத்துவதற்கு தடைவிதிக்கப்படும் என கருதப்பட்டிருந்தது. இருந்தும் மணிவாசகர் மடாலயத்தின் நிர்வாக சபை அங்கத்தவர் திரு.விஸ்வலிங்கம் வைகுந்தவாசன் என்பவரால் 08.10.2020 வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இக்கூட்டத்திற்கு தடைவிதிக்குமாறு கோரி 9 ஆவணங்கள் அல்லது 9 காரணங்களை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையிட்டும் மேற்படி கூட்டத்தினை தொடர்ந்து வரும் 14 நாட்களிற்குள் கூட்ட முடியாது என்றும் தொடர்ந்தும் வழக்காளி அதற்கு பின்னரும் கூட்டத்தினை கூட்டுவதற்கு தடையுத்தரவினை கோரும் பட்சத்தில் தகுந்த காரணங்கள் இருக்கும் பட்சத்தில் மேலும் இப்பொதுக்கூட்டத்தினை நடாத்துவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் கோர்ட் ஆணை தெரிவிக்கின்றது.
இதனையடுத்து 09.10.2020 இன்று வெள்ளிக்கிழமை யாழில் வெளியாகும் நாளிதள் ஒன்றில் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.