22.10.2021 இன்று வெள்ளிக்கிழமை காரைநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற காரைநகர் கோட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர் தினவிழா
22.10.2021 இன்று வெள்ளிக்கிழமை காரைநகர் கோட்ட முன் பள்ளிகளின் ஆசிரியர் தின விழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி காரைநகர் கலாச்சார மண்டபத்தில் மு. ப 9.00 மணிக்கு ஆரம்பமாகி, ஓய்வு நிலை அதிபர் திரு வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வட மாகாண கல்விப் பணி மனையின் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் திரு. A. S. சற்குணராஜாவும்அவர்களும் , சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வி அமைச்சின் ஒய்வு நிலை செயலாளர் திரு ப. விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஆசிரியர் தின சிறப்பு உரையினை யாழ் பல்கலைக்கழக கல்வியியல் துறை விரிவுரையாளர் திரு. இ. சர்வேஸ்வரா அவர்களும் உரை ஆற்றினார்கள். ஆசிரியர்களுக்கு நினைவு சின்னமும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ் ஆசிரியர் தின விழா காரைநகர் அல்லின் வீதி அமரர் திருமதி பத்மாவதி பேரம்பலம் நினைவாக அவர்களின் குடும்பத்தினரின் அனுசரணையுடன் நடைபெற்றது