திரு.முத்து பொன்னம்பலம், தலைவர் கனடா காரை கலாசார மன்றம்..!

திரு.முத்து பொன்னம்பலம், தலைவர் கனடா காரை கலாசார மன்றம்..!

28.04.2025 கடந்த வருடம், 18 மாங்களின்கு முன்னர் தலைவராக பொதுக்கூட்டத்தின் போது கலந்து கொண்ட 28 அங்கத்தவர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டார். இதுவரை நடந்தது என்ன..?

நேற்றைய தினம் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை எனது இந்த முகநூலில் ‘சேற்றில் மூழ்கி எழுந்த பன்றி’ யை தலைவராக்கியது ஏன் என்றும் அதற்கு நூறு நபர்கள் பதில் கேட்டு எழுதியிருந்தால் திறந்த பதில் எழுத தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தேன். 24 மணி நேரங்களில் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் முகநூல் உட்பக்கத்தில் messenger ஊடாக உண்மையை எழுதுமாறும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com சொல்வது உண்மையானால் தொடர்ந்து பதில் எழுதுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இருந்த போதிலும் நேற்றைய தினம் வெளியான ‘சேற்றில் மூழ்கி எழுந்த பன்றி’ க்கு திறந்த வெளியில் ‘like’ செய்தவர்களை தொடர்பு கொண்டு முத்து பொன்னம்பலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் தான் கனடாவில் free ஆக இருப்பதாகவும் எனது முகநூலில் பொய் எழுதப்பட்டுள்ளதாக அதற்கு மட்டும் வியாக்கியானம் கொடுத்துள்ளார், ஆனாலும் அதனை நம்புவதற்கு எவரும் தயாராக இல்லாத நிலையில் முத்து பொன்னம்பலம் ஏன் தலைவராக்கப்பட்டார், ‘சேற்றில் மூழ்கி எழுந்த பன்றியை’ ஏன் தலைவராக்க ‘எனது ஊர் காரைநகர் அப்போது உடன்பட்டிருந்தது… என்பதை பொதுவில் அறிய பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதோ அதற்கான பதில்:

முத்து பொன்னம்பலம் கனடா காரை கலாசார மன்றம், கனடா காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் என மொத்தம் 19 நபர்களிற்கு எதிராக கனடிய சிவில் நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈட்டு வழக்கினை பதிவு செய்துள்ளார்.

இந்த இரண்டு அமைப்பின் பொதுக்கூட்டங்கள், நிர்வாக சபை கூட்டங்களில் தன்னைப்பற்றி தப்பான விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும் அதனால் தனது மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியகார நிலமையை அடைந்ததாகவும் அதற்கு நஷ்ட ஈடாக ஒரு மில்லியன் டொலர் கேட்டு வழக்கினை பதிவு செய்திருந்தார்.

ஆரம்பத்தில் இந்த வழக்கினை இலகுவாக கையாளலாம் என நினைத்து முத்து பொன்னம்பலம் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கவும் முத்து பொன்னம்பலம் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் உண்மையெனவும், எதற்குமே உதவ முடியாத, சொந்த நலனை மட்டும் கருத்தில் கொண்டு தேவையற்ற வகையில் அனைவருக்கும் எதிராக கேஸ் போடப்பட்டதை நிரூபிக்க முடியும் என கருதிய இரண்டு அமைப்புக்களும் வக்கீல்களை அமர்த்தினார்கள்.

ஆனால் கனடிய சிவில் கோர்ட்டில் நேரடியாக விசாரணைக்கு வராது என்பதும் விசாரணையை ஆரம்பிக்கவே ஆயிரம் படிமுறைகளை தாண்டி செல்ல வேண்டும் என்பதும், முத்து பொன்னம்பலம் மேற்படி இரண்டு அமைப்புக்கள் மற்றும் 19 நபர்களிற்கு எதிராக 800 பக்கங்களிற்கு மேலாக ‘ அங்கு கதைத்தது, இங்கு கதைத்தது, அவர் சொன்னது, இவர் சொன்னது, முகநூலில் வந்தது, இணையத்தளத்தில் வந்தது என்று ஆயிரக்கணக்கான பங்கங்களில் தனது வழக்கை பதிவு செய்திருந்தார்.

வக்கீல்களிற்கு இவற்றை பதிவிறக்கம் செய்து வாசித்து பின் ஒவ்வொன்றாக கோர்ட்டிற்கு விளக்கம் எழுத பல ஆயிரம் டொலர்கள் செலவு செய்யப்பட்டிருந்தது. கடந்த வருடம் வரை கனடா காரை கலாசார மன்றம் 18,000 கனடிய டொலர்கள்(40 இலட்சம் ரூபாய்கள்) வரை வக்கீல்களிற்காக வழங்கியிருந்தது. மேலும் இதுவரை நடைபெற்ற விசாரணைக்கு வராத வழக்கிற்காக 35,000 டொலர்கள்(80 இலட்சம் ரூபாய்கள்) வக்கீல்களிற்கு வழங்கப்படவேண்டியும் உள்ளது. இதுவரை வழங்கப்படாது இருக்கும் வக்கீலுக்கான 35,000 டொலர்கள் வரையான நிதிக்கு மாதாந்தம் வக்கீல்கள் வட்டியும் சேர்த்து பில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் கனடா காரை கலாசார மன்றம் முத்து பொன்னம்பலம் கனடா காரை கலாசார மன்றத்திற்கு எதிராகவும் 19 நபர்களிற்கு எதிராகவும் போட்ட வழக்கினை ‘சேற்றில் மூழ்கி எழுந்த பன்றியை’ வைத்தே முடிவிற்கு கொண்டுவர எண்ணினார்கள். வழக்காளியாகவும், எதிராளியாகவும் முத்து பொன்னம்பலம் 28.04.2025 அன்று தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன் தான் போட்ட வழக்கினை தானே அணுகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

கடந்த காலங்களில் ஊரிற்கோ, நாட்டிற்கோ, குடும்பத்திற்கோ பயன்ற்ற வகையில் வைக்கோல் பட்டறை நாயாக குரைத்துக் கொண்டிருந்த நபரை அந்த வைக்கோலை தின்ன திணிக்கப்பட்டார். வைக்கோல் பட்டறை நாய்களால் வைக்கோலை தின்ன முடியாது என்று தெரிந்தும் திணிக்கப்பட்டது தான் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் பதவி.

ஊரும், உலகும், கனடா வாழ் காரைநகர் மக்களும் தற்போது நன்கு அறிவார்கள். இது போன்ற பயனற்ற வீணர்களால் யாருக்கும் எள்ளளவும் எவ்விதமான நற்பயனையும் கொடுத்து விட முடியாது என்பதனை.

கனடா காரை கலாசார மன்றத்தின் தொடரும் இரண்டாவது வருடமும் பயனற்ற வகையில் கடந்து போனாலும் இது போன்ற சேற்றில் மூழகிய பன்றிகளை நன்கு அறிந்து கொண்டு சமூகத்தை விட்டு தள்ளி வைக்கவும், பொதுப்பணி, சேவைகள், மனிதாபிமானம் என்பவற்றில் இருந்து விரட்டியடிக்கப்படவும் தயாராக வேண்டும் என்பதற்காகவும் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த ஒன்றரை வருட தலைவர் பதவியும், முத்து பென்னம்பலம் போட்ட வழக்குகளும் தெளிவாக புரிய வைத்துள்ளது.

கனடா காரை கலாசார மன்றம் ஏன் இரண்டாவது ஆண்டாகவும் செயலிளந்துள்ளது என்பதற்கும் அடுத்து என்னவென்பதை நீங்கள் தீர்மானிப்பதற்கும் இந்த பதில் விளங்க வைத்திருக்கும் என நம்புகிறேன். நன்றி.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

கனடா காரை கலாசார மன்றம்…! 28.04.2024 கடந்த வருடம் முதல் இன்று வரை 18 மாதங்களாக நடந்தது என்ன…!

ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply