www.karainews.com


‘செய் அல்லது செத்து மடி’


  • Home
  • Alankanru
  • Kalundai Road Aug 2020
  • Karainagar People Photos
  • MaranaThiravianathan
  • FranceSep2020
  • MaranaSelvaratnamS
  • SivanMadalaymOct02
  • SivanOct09
  • SivanKovil 2020Oct13
  • SadayaliKovil2020Oct27
  • UniAdmission2020
  • Free land application
  • MaranaAlagan
  • MaranaShanmugampillai
  • NewMHO
  • KKnadarajahMaster
  • SportsClub2020
  • KalanithiSportsClub2020Dec
  • ThiruvembaPhotos
  • Poem 1
  • KalapoomyEducationDev
  • KaraiHinduJan2021
  • Payirikoodal2021Jan19
  • IndranNagalingam
  • LeelavathiVisvalingam

WWW.KARAINEWS.COM


மரண அறிவித்தல்
திருமதி லீலாவதி விஸ்வலிங்கம்
நடுத்தெரு, காரைநகர்(இலண்டன்)
மறைவு: 15.02.2021
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் இணைக்கப்பட்டுள்ளது
இங்கே அழுத்துக...!
.
.
.
.
.
கல்விப்பணியில் உயரிய சிந்தனையில் ஊரிற்கு பெருமை சேர்க்கும் திரு.இந்திரன் நாகலிங்கம்!

விபரம் இங்கே அழுத்துக...!
.
.

.
.
காரைநகர் இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைகளில் ஒன்றாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது!

விபரம் இங்கே அழுத்துக...!
.
.


பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் 19.01.2021 கொடியேற்றத்துடன் ஆரம்பமானது!

விபரம் இங்கே அழுத்துக..!


.
.
களபூமி கல்வி அபிவிருத்தி
கழகம்

ஆரம்பம் 10.11.2019


விபரம் இங்கே அழுத்துக..!

'பன்னாடு சென்றும் பயன் இல்லை என்னோடு மனதோடு செயலோடு காரை மணம் இல்லை எனில்...'
கவிதை ஒன்று: ஆக்கம்
தீசன் திரவியநாதன்
இங்கே அழுத்துக...!.
.


ஈழத்து சிதம்பரத்தில் திருவெம்பாவை உற்சவத்தின் போது திரு.மு.சுந்தரலிங்கம் அவர்களால் பாடப்பட்ட திருவெம்பாவை பாடல்களை கேட்க இங்கே அழுத்துக...!.


ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் திண்ணபுரம் சிவன்கோயிலில் திருவெம்பாவை உற்சவம் 21.12.2020 ஆரம்பம்
கடந்த காலங்களின் திருவெம்பாவை உற்சவ கால படங்கள் இங்கே அழுத்துக...!

.
.
.
கலாநிதி விளையாட்டுக்கழகம் சிரமதான பணியில்...

விபரம் இங்கே அழுத்துக..!
.
.
.

காரைநகரின் புதிய வைத்திய அதிகாரியாக(MHO) Dr.யோ.யதுநந்தன் 08.12.2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

விபரம்
இங்கே அழுத்துக...!
.
.

காரை மண்ணின் சிறந்த ஆசான், கல்வியாளர், சமூகப்பற்றாளர், சிறந்த நிர்வாகி, காரை மக்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் திரு.கே.கே.நடராஜா அவர்கள் மறைவு!

விபரம்
இங்கே அழுத்துக...!

மரண அறிவித்தல்
கந்தசாமி சண்முகம்பிள்ளை (சன்)
கள்ளித்தெரு, காரைநகர்

மறைவு: 05.12.2020

இங்கே அழுத்துக...!

மரண அறிவித்தல்

திரு.கணபதிப்பிள்ளை அழகேந்திரன்(அழகன்)
நீலிப்பந்தனை, காரைநகர்
மறைவு: 22.11.2020

இங்கே அழுத்துக...


ஆயிரத்திற்கும் மேற்பட்ட காரைநகர் இளைஞர், யுவதிகள் காரைநகர் பிரதேச செயலகத்தில் 13.11.2020 இன்று வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பம்...

விபரம் இங்கே அழுத்துக...
.

காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்று பல்கலைக்கழக அனுமதி பெறாதோர் எண்ணிக்கை 60..!

விபரம் இங்கே அழுத்துக....!
.
.
.

.
.
சடையாளி வைரவர் கோயில் கேணி இறைத்து சுத்தமாக்கப்பட்டுள்ளது
27.10.2020
.
.
.
.
காரைநகர் சிவன்கோயில் மூன்றாம் வீதி சுற்றுப்பிரகாரம் வேலி12.10.2020 திங்கட் கிழமை மாலை 9 மணியளவில் தெற்கு பகுதி கேற் மற்றும் சுற்று கேற் என்பன இனந்தெரியாத சிலரால் சேதமாக்கப்பட்டுள்ளது.
விபரம் இங்கே அழுத்துக..!
.

ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலயம் 11.10.2020 அன்று நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
விபரம் இங்கே அழுத்துக...!
.

.
ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய பிணக்குகள் தொடர்பாக நல்லதொரு முடிவினை காரைநகர் ஈழத்து சிதம்பர அடியவர்கள் எடுத்துக்கொள்ள நல்லதொரு சந்தர்ப்பம்!
விபரம் இங்கே அழுத்தவும்..!
.
மரண அறிவித்தல்
சுப்பையா செல்வரத்தினம்
ஓய்வுபெற்ற களஞ்சியபொறுப்பாளர்- பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், காரைநகர் இடைப்பிட்டி காரைநகர் மறைவு: 29.09.2020
.

.
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் கொரோனா காலத்திலும் ஊர்ப்பணி!
13.09.2020 கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் விபரம் இங்கே அழுத்துக..!
.
காரைநகரிலும் மற்றும் உலகெங்கிலும் பரந்து வாழும் காரைநகர் மக்களின், கடந்த காலங்களிலில் இந்த இணையத்தளத்தில் எடுத்து வரப்பட்ட அல்லது அறிந்து கொள்ளப்பட வேண்டியவர்களின் புகைப்படங்கள். இங்கே அழுத்துக..!

.
.
ஆத்ம சாந்தி அஞ்சலி!
அமரர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்
மறைவு: 08.09.2020
.

.
.
.மரண அறிவித்தல்
அமரர் பொன்னையா திரவியநாதன் சுதுமலை, காரைநகர், ஆனைக்கோட்டை
தோற்றம்: 06.01.1937 மறைவு: 01.09.2020
.
.
.
.
யாழ்ப்பாணம் - காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றம் பெறும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 08.05.2020 இன்று படமாக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன...
.
.
.
.
.
.
ஆலங்கன்று வைரவர் ஆலய சுற்றாடல்
.
.
.
.
.
காரைநகர் சேவையாளர் கௌரவம் - 2020.
2020 ஜனவரி 05ம் திகதி காரைநகரில் இடம் பெற்ற நிகழ்வின் விபரம் வருமாறு:
காரைநகர் சேவையாளர் கௌரவம் - 2020
2020 ஜனவரி 05ம் திகதி காரைநகரில் இடம் பெற்ற நிகழ்வின் விபரம் வருமாறு:
.

காரை மண் பெருமை கொள்ளும் கொடைவள்ளல்
'சுவிஸ் நாதன்"
.
.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவு ஆரம்பமும் அதன் வளர்ச்சியும்...
.
ஈழத்து சிதம்பரத்தை தளமாக கொண்டு மீண்டும் குழப்பமும் தனிமனித பலப்பரீட்சைகளும் ஆரம்பமாகியுள்ளன..!

புதிய வண்ணத்தில் ‘காரை நியூஸ்’ இணையத்தளம்.
இதுவரை காலமும் இயங்கி வந்த தளத்தில் இருந்து புதிய தளத்திற்கு மாற்றப்பட்டு பரீட்சார்த்தமாக ‘காரை நியூஸ்’ இணையத்தளம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து முழுமையான திருத்தங்கள் செய்யப்படும்.



இது கதையல்ல... வரலாறு:
காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கு ஒரு கோடி இருபது இலட்சம்: 05.05.2015 ஐந்து வருடங்கள் முடிவில் ஓர் பார்வை





கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு 12 ஆரம்ப பாடசாலைகளிற்கும் தலா 10 இலட்சம் வீதம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.


காரைநகர் அபிவிருத்தி சபை மற்றும் ஒவ்வொரு பாடாசாலைகளின் இணைந்த வகையில் 12 தனிப்பட்ட நிரந்தர வைப்பாக மொத்தம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு பாடசாலைகளும் ஆறுமாதங்களிற்கு ஒரு தடவை நேரடியாக பாடசாலைகளின் அபிவிருத்தி சங்க கணக்கிற்கு அதன் வட்டிப்பணமாக 50 ஆயிரம் ரூபாய்களிற்கு மேற்பட்ட நிதியினை பெற்றுவருகின்றார்கள். வருடம் ஒன்றிற்கு 12 ஆரம்ப பாடாசாலைகளும் ஒரு இலட்சம் வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 60 இலட்சம் ரூபாய்களிற்கு மேற்பட்ட நிதியினை வட்டியாக பெற்றுள்ளார்கள்.


2014ம் ஆண்டு திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையில் அமைந்த நிர்வாக சபையில் செயலாளராக திரு.தீசன் திரவியநாதன் அவர்களும், பொருளாளராக திரு.பேரின்பராஜா திருநாவுக்கரசு தலைமையிலான நிர்வாக சபையினரால் இத்திட்டமானது வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தினை செயற்படுத்த நிர்வாக சபை எடுத்த தீர்மானங்களிற்கு கனடாவில் உள்ள காரைநகர் மக்களிடையே மிகப்பெரும் ஆதரவு கிடைக்கப்பெற்ற போதிலும் சிறியளவிலான முந்தைய நிர்வாக சபையினை சேர்ந்த 13 பேர்கள் கொண்ட ஒரு குழுவினரால் பலத்த எதிர்ப்பும் அதனை செயற்படுத்த பலவித தடைகள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் மட்டுமல்லாது கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தினையும் செயற்படுத்த முடியாதளவிற்கு வதந்திகளை பரப்பியதுடன் கனடா காரை கலாசார மன்றத்தின் வங்கி கணக்கினை வங்கிக்கு தவறான தகவல்களை வழங்கி ஒன்றரை வருடங்கள் முடக்கியும் இருந்தனர்.


2016ம் ஆண்டு மே மாதம் மீண்டும் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபை அமையப்பெற்று மேற்கொண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் வருடாந்த செயற்பாடுகளை செயற்படுத்தி அதன் மூலம் பெறப்பட்ட 25,000 டொலர்கள் வரையான நிதி கனடா காரை கலாசார மன்றத்தின் வங்கிக்கணக்கில் இருந்ததும் தொடர்ந்து 2017-2018 இல் அமைந்த திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையிலான நிர்வாக சபையினரால் மேற்கொண்டு 20,000 டொலர்கள் வரையான நிதி மன்றத்தின் செயற்பாடுகள் மூலம் பெறப்பட்டு 2018 இன் இறுதிப்பகுதியில் மொத்தம் 50 இலட்சம் ரூபாய்கள் இலங்கையில் கனடா காரை கலாசார மன்றத்தின் பெயரில் உள்ள ஹட்டன் நாஷனல் வங்கிக் கணக்கில் காரைநகர் பாடசாலைகளின் மேலதிக கற்றல் தேவைகளிற்கென நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.


பாடசாலைகளின் நிரந்தர வைப்பிற்கான நிதி சேகரிப்பின் போது திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையினர் கனடாவில் வாழும் காரைநகர் மக்களிடம் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது நூற்றுக்கணக்கான கனடா வாழ் காரைநகர் மக்கள் தமது பங்களிப்பினை செலுத்த முன்வந்தனர். ஆனாலும் இத்திட்டமானது நடைமுறைக்கு சாத்தியம் அற்றது எனவும் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் சேர்த்துக்கொள்வது சாத்தியமற்றது எனவும் அவ்வாறு பணத்தை பாடாசாலைகளிடம் கொடுத்தால் அப்பணம் மோசடி செய்யப்பட்டு காணாமல் போய்விடும் என்றும் நம்பத்தக்க வகையில் பல வதந்திகளை பரப்பியதுடன் நிதி வழங்க முன்வந்தவர்களிற்கு தனிப்பட்டவகையில் தொடர்பு கொண்டு அதனை தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.


ஆனாலும் சற்றும் மனந்தளராத திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையினர், செயலாளராக கடமையாற்றிய திரு.தீசன் திரவியநாதன் 20,000 டொலர்கள்(23 இலட்சம் ரூபாய்கள்), மற்றும் தலைவராக டமையாற்றிய திரு.தம்பிஐயா பரமானந்தராசா 10 இலட்சம் ரூபாய்கள், மன்றத்தின் பெயரில் கனடாவில் இருந்த 15,000 டொலர்கள்(17 இலட்சம் ரூபாய்கள்) மற்றும் இலங்கையில் மன்றத்தின் பெயரில் இருந்த 10 இலட்சம் ரூபாய்கள் உட்பட இத்திட்டத்திற்கு 85 பேர்கள் வரையானோர் மட்டும் வழங்கிய நிதியுதவியுடன் 05.05.2015 அன்று காரைநகர் அபிவிருத்தி சபை திரு.சிவா மகேசன் தலைமையிலான நிர்வாக சபையினர், காரைநகர் பாடாசாலை கல்விக்கோட்ட அதிகாரி முன்னிலையில் அதிபர்களை அழைத்து காரைநகர் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் கலந்து கொண்டு மேற்படி நிரந்தர வைப்புக்களிற்கான பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


05.05.2015 அன்று நிரந்தர வைப்பில் இடப்பட்ட ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் காரைநகர் அபிவிருத்தி சபை மற்றும் பாடசாலைகளின் பெயர்களில் பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகின்றமையும் அதன் விபரங்கள் 2019ம் ஆண்டு காரைநகர் அபிவிருத்தி சபையினரால் வெளிளிடப்பட்ட வரவு செலவு அறிக்கையின் ஊடாக அறிந்து கொள்ளத்தக்கது. அத்துடன் வருடந்தோறும் கிடைக்கப்பெறும் வட்டி பணத்தின் ஊடாக பாடசாலைகளில் செயற்படுத்தப்படும் செயற்திட்டங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளிற்காக வழங்கப்படும் செலவீனங்கள் உட்பட தனிப்பட்ட வகையில் இதன் வட்டி பணத்தின் வரவு செலவு விபரங்கள் கனடா காரை கலாசார மன்றத்திற்கு பாடசாலை அதிபர்களினால் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.


மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம், சிறு திருத்த வேலைகளிற்காக பயன்படுத்த முடியும். மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு), உணவு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே 05 / நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.





மேலும் இத்திட்டத்திற்கு நிதி உதவி செய்தவர்கள் விபரம் வருமாறு: