02.July.2024 செவ்வாய்கிழமை, கனடா காரை கலாசார மன்றம்.
கனடா காரை கலாசார மன்றத்தின் இணையத்தளத்தை அத்துமீறி பயன்படுத்திவரும் ஒரு குழுவினரின் அடாவடித்தனங்கள். உண்மை செய்திகள் இந்த முகநூலில் மட்டுமே வெளிவருகின்றன. அதுவும் மண்ணுக்கும் மன்றத்திற்கும் மக்களிற்கும் நன்மை பயக்கும் என்றால் மட்டுமே செய்திகள், விபரங்களை தெரிவிக்கிறேன்.
கடந்த வாரம் எனது முகநூல் வாயிலாக ‘காரை ஒன்றுகூடல் 2024’ இந்த ஆண்டிற்கான காரை மக்களின் ஒன்றுகூடல் 21.07.2024 அன்று நிர்வாகத்தை பொறுப்பேற்க முடியாத ஒரு குழுவினரால் நடாத்தப்படவுள்ளதாக தெரிவித்திருந்தேன். 28.04.2024 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டதில் தமக்கான பதவிகளை கேட்டுப்பெற்றுக்கொண்டவர்களால் கடந்த இரண்டு மாதகாலமாக நிர்வாகத்தை இயக்குவதற்கான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்கள், கனடா காரை கலாசார மன்றத்தின் வருடாந்த நிகழ்வான ‘காரை ஒன்றுகூடல்’ நிகழ்வினை எந்த அடிப்படையில், எந்த சட்டத்தின் பிரகாரம், எந்த நிரவாகம் நடாத்தப்போகிறது என்ற வகையில் விபரம் தெரிவித்திருந்தேன்.
பொதுக்கூட்டத்தில் நிர்வாக சபை என தெரிவு செய்யப்பட்டவர்கள் நிர்வாகத்தை நடாத்த முடியாத குழுவினர் தம்மை தற்காலிக நிர்வாக சபை என்றும் பின்னர், காப்பாளர் சபை என்றும் இப்போது ‘ஏற்பாட்டளர்கள்’ என்றும் கடந்த இரண்டு மாதங்களில் வேறு வேறு பெயர்களில் அறிக்கை விடுகிறார்கள். கனடா காரை கலாசார மன்றத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை 28.04.2024 பொதுக்கூட்டத்தன்றே பறித்தெடுத்துக்கொண்ட நிலையில் அதன் மூலம் மக்களை குழப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் தமது பதவிகளை கேட்டுப்பெற்றுக்கொண்டவர்கள் இன்னமும் நிர்வாகத்தை நடாத்த முடியாதளவிலும், எந்தளவிலும் உத்தியோக பூர்வமாக இயங்க முடியாத நிலையிலும் மன்றத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை பயன்படுத்தி வருவதும் சட்டத்திற்கும் மன்றத்தின் இறையாண்மைக்கும் பெரும் பங்கமே.!
கடந்த பல ஆண்டுகளாக வெவ்வேறு சமூக ஊடகங்கள் மூலம் குழுக்களை அமைத்து அவற்றில் மாறி மாறி ஒவ்வொருவராக ஏவி விட்டு கூத்து பார்த்தவர்கள் இப்போது கனடா காரை கலாசார மன்றத்தின் இறையாண்மை பொருந்திய இணையத்தளத்தை பயன்படுத்தி வருவது எந்த வகையில் நியாயமாக இருக்கப்போகிறது. இந்த இணையத்தளத்தின் ஊடாக வெளிவரும் செய்திகளிற்கு யார் அல்லது எந்த நிர்வாகம் பொறுப்பாக உள்ளது. அது மட்டுமன்றி மன்றத்தின் மின் அஞ்சல் முகவரியை பயன்படுத்தி சமூகசீர்கேடுகள் அல்லது சட்டத்திற்கு முரணான தொடர்புகளை மேற்கொண்டால் அல்லது கடிதங்கள் அனுப்பினால் அதனை யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்..?
மன்றத்தின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் இருந்து தன்னை ஒருவர் அகற்றிவிட்டார் என்று மன்றத்திற்கும் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஒருவருக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தவரே இன்று தனது பதவியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மன்றத்தின் இணையத்தளம், மன்றத்தின் மின்அச்சல், மன்றத்தின் முகநூல் என்பவற்றை பயன்படுத்தி வருவது சட்டத்திற்கு மட்டுமல்ல யதார்த்தத்திற்கும் ஒவ்வாத செயலை புரிந்து வருவதுடன் தனது இலக்கே கனடாவில் இயங்கும் கனடா காரை கலாசார மன்றம், காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் என்பவற்றை இயங்க விடாது தடுப்பதும், பொதுப்பணிகளில் ஈடுபடுபவர்களை பயமுறுத்தி கேஸ் போடுவதும், பணம் பறிப்பதுவுமாகவே வழக்கமாக கொண்டுள்ளார்.
கனடா காரை கலாசார மன்றத்தின் ‘காரை ஒன்று கூடல்’ திட்டமிடப்பட்டது போன்று நடைபெற வேண்டும் என நினைத்தால் குறைந்த பட்சம் தற்போது நிர்வாக சபைக்கு பொதுக்கூட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் தற்காலிகமாகவேனும் தமது பதவிகளை தெரிவித்து வங்கி ஒன்றில் தற்காலிக வங்கி நடைமுறைக்கணக்கை திறந்து கொண்டால் மட்டும் போதுமானதாகும்.
கடந்த நிர்வாக சபையின் கணக்கு வழக்குகளையோ அன்றி வங்கிக்கணக்கையோ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பது இப்போதைய நிலையில் கட்டாயம் இல்லாது போனால் தற்காலிகமாக நிர்வாகத்தை இயக்குவதற்கும் தம்மையும் தமது பதவிகளையும் அடையாளப்படுத்துவதற்காகவேனும் தற்காலிக வங்கி கணக்கு அவசியம்.
கடந்த காலங்களில் இது போன்று நடைபெற்றுள்ளது. 2016ம் ஆண்டு முன்னைய திரு.ரவி ரவீந்திரன் தலைமையிலான நிர்வாகம் வங்கிக்கணக்கை கையளிக்க தவறியதுடன் ஒன்றரை ஆண்டுகள் முடக்கி வைத்திருந்ததும், அதன் பின்னர் தெரிவான திரு.பாலச்சந்திரன் சபாரத்தினம் தலைமையிலான நிர்வாகம் தற்காலிக வங்கிக்கணக்கை ஆரம்பித்து நிர்வாகத்தை முன்னெடுத்துச்சென்றார்கள் என்பதும் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த கால உண்மைகள்.
அன்றைய நிலையில் அவர்கள் வங்கிக்கணக்கை கையளிக்க தவறியதும் கடைசிவரை அதனை வளங்க முடியாமலும் பின்னர் வங்கியும் மன்றத்தின் புதிய நிர்வாகமும் செய்து கொண்ட சமரசங்களின் பின்னர் ஒன்றரை வருடங்களின் பின்னர் தாமாக வங்கி மன்றத்திடம் வங்கி கணக்கை கையளித்தது.
2015ம் ஆண்டு பாடசாலைகளிற்கு கொடுத்தது போக மீதமிருந்த $24,500 டொலர்கள் வரையான பாடசாலைகளிற்கான நிதியை கொடுக்க மனம் இன்றியே வங்கி கணக்கை முடக்கினார்கள் என்பது மேலதிக தகவல். பின்னர் வங்கி கணக்கு மன்றத்தின் கையில் கிடைக்கப்பெற்றதும் மேலும் 2017, 2018 காலப்பகுதியில் திரு.பாலச்சந்திரன் சபாரத்தினம் அவர்களது தலைமையின் கீழ் நடாத்தப்பட்ட மன்றத்தின் நிகழ்வுகள் மூலம் ஊரிற்காக மிஞ்சிய நிதிகளும் சேர்த்து மன்றத்தின் கணக்கில் இலங்கையில் ஹட்டன் நாஷனல் வங்கியில் இன்றும் உள்ள 65 இலட்சம் ரூபாய்கள் மொத்த நிரந்தர வைப்பாகும்.
உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். யாருடைய நிதி, யாருக்காக சேர்க்கப்பட்டது, யார் வைப்பில் இட்டார்கள், ஏன் வைப்பில் இட்டார்கள், எப்போது வைப்பில் இட்டார்கள்.. என்ற பல கேள்விகளிற்கு விடை காண முயற்சியுங்கள். சமூக வலைத் தளங்களில் ஆளுக்காள் அவதூறு பேசி சந்தோசித்து அதன் மூலம் தமது வக்கிரகங்களிற்கு மருந்து தடவும் குழு யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மண்ணுக்கோ, மக்களுக்கோ, பாடசாலைகளிற்கோ அன்றி கல்விக்கோ, கோயிலுக்கோ, குளத்துக்கோ அல்லது அவர்களிற்கோ பயனற்ற வகையில் மட்டுமே இவர்களது செயற்பாடுகள் கடந்த இரண்டு மாத காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. மன்றத்தின் இணையத்தளத்தில வெளியான தகவல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி!
தீசன் திரவியநாதன்