காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்று பல்கலைக்கழக அனுமதி பெறாதோர் எண்ணிக்கை 60..! | 2020

காரைநகர் பாடசாலைகளில் இருந்து 2019ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகளிற்கு தேற்றிய மாணவர்களில் இருந்து 19 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகமையை பெற்றிருக்கின்றார்கள்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் இருந்து 9 மாணவர்களும், யாழ்ற்ரன் கல்லூரியில் இருந்து 8 மாணவர்களும் இவ்வாறு பல்கலைக்கழகம் செல்ல தகமை பெற்றுள்ளார்கள். காரைநகரில் உயர்தர கல்வி கற்ககூடிய மேற்படி இரண்டு பாடசாலைகளில் இருந்தும் 19 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ள போதிலும் மேற்படி இரண்டு பாடசாலைகளில் இருந்தும் மொத்தம் 80 மாணவர்கள் வரையானோர் உயர்தர பரீட்சை எழுதுவதற்கு தகுதி பெற்றிருந்தார்கள்.

பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்ற மாணவர்களிற்கான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகாத 60க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கான எதிர்காலம் என்னவென்பதை அம்மாணவர்களிற்கும் அவர்களுடைய பெற்றோர்களிற்கும் தெளிவு படுத்த வேண்டிய கடமை இப்பாடசாலைகளின் அதிபருக்கும் கல்விச் சமூகத்திற்கும் உண்டு.

இடம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இப்பாடசாலைகளின் வளர்ச்சியில் பங்காற்றிவரும் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறாத மற்றைய 60க்கும் மேற்பட்ட மாணவர்களை காரைநகரிலும் மற்றும் யாழில் இயங்கி வரும் அரச தொழில் நுட்ப கல்லூரிகளிலும் பயிற்சி கலாசாலைகளிலும் தொடர்ந்து கல்வி பயின்று சமூகத்தில் நற்பிரஜைகளாக இவர்களையும் வளர்த்துக்கொள்ள முயற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். காரைநகரில் உயர்தரம் கற்ற 80 மாணவர்களில் 17 மாணவர்களின் தகமையை மட்டும் வெற்றியாக கொண்டாடுகின்ற அதே வேளை மற்றைய 60 மாணவர்கள் இந்த வருட முடிவில் எந்தெந்த துறைகளை தேர்ந்தெடுத்து கல்வியை தொடர்கின்றார்கள் என்பதையும் அந்த 60 மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டியது கல்வியாளர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.

உயர்தரம் கற்று பல்கலைக்கழகம் செல்ல தகமை பெறமுடியாத மாணவர்களை தொழில்நுட்ப கல்வி கற்று கல்வியில் மேம்படுத்த தொழில்நுட்ப கல்லூரி தொடர்பாகவும் பயிற்சி கலாசாலைகள் தொடர்பாகவும் விபரங்கள் விளக்கங்களை வழங்கி அதற்கான கருத்தரங்குகளை இப்பாடசாலைகளில் நடாத்துவதற்கு பாடசாலை நிர்வாகங்களும் பழைய மாணவர் சங்கங்களும் பொது அமைப்புக்களும் ஆவண செய்ய வேண்டும். செய்வார்கள் என எதிர்பார்ப்போம்.

பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்ற மாணவர்கள் விபரம் பாடசாலை ரீதியாக வருமாறு:

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரை மண் பெருமை கொள்ளும் கொடைவள்ளல் “சுவிஸ் நாதன்”

காரைநகர் இளைஞர், யுவதிகள் திடீர் விழிப்புணர்வு!| 2020