வீட்டுத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்களிற்கு வீட்டுத்திட்டத்தினை நிறைவு செய்து கொடுக்க ‘எனது ஊர் காரைநகர்” மூலம் நிதியுதவி! |2022

காரைநகர் பெரியமணலை சேர்ந்தவரும் காரைநகர் சிவன்கோயில் மற்றும் பல கோயில்களில் அடிப்படை உதவியாளராக பணிபுரியும் உடல் உபாதையுள்ள அன்பர் ஒருவரிற்கு வீட்டுத்திட்டத்தின் மூலம் அரசினால் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அந்த வீட்டுத்திட்டத்தினை நிறைவு செய்து நிலம் போடவும் கதவு, யன்னல் போடவும் மேற்கொண்டு இரண்டரை இலட்சம் ரூபாய்கள் வரை தேவையெனவும் அந்த வீட்டுத்திட்டத்திற்கு பொறுப்பாக இருந்து பணிபுரியும் உதவியாளர் மூலம் அறிந்து கொண்ட காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் அதற்கான உதவியினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய திரு.தீசன் திரவியநாதன் அவர்களால் ‘எனது ஊர் காரைநகர்’ சார்பாக ரூபா ஒரு இலட்சம் வழங்கப்பட்டது. மேற்படி உதவியின் மூலம் காரைநகர் அபிவிருத்தி சபை முன்னின்று அந்த அன்பரிற்குரிய வீட்டினை முழுமைபடுத்தி வழங்கவுள்ளார்கள். மேற்படி குடும்பத்தில் காரைநகர் இந்துக்கல்லூரியில் கல்விபயிலும் இரண்டு மாணவிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் கல்லந்தாழ்வை சேர்ந்த மூன்று பிள்ளைகளை உடைய கூலித்தொழிலை அடிப்படையாக கொண்டியங்கும் குடும்பத்தின் வீட்டு திட்டத்திற்கு கடந்த வருடம் மூன்று தடவைகளாக ரூபா ஒரு இலட்சம் ரூபா வரை வழங்கப்பட்டது.

மேற்கொண்டு இந்த மாதம் அந்த வீட்டு திட்டத்தினை பார்வையிட சென்ற போது மேலும் வீட்டுத்திட்டத்தினை நிறைவு செய்ய மின்சார இணைப்பு பெற்றுக்கொள்ள ரூபா 25,000 வழங்கப்பட்டது. ‘எனது ஊர் காரைநகர்” ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்திற்கு சரஸ்வதி அம்மா வழங்கிய நிதியினை காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் தர்மகத்தா அவர்களினால் குடும்பத்தாரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் மேற்படி குடும்பத்தில் வியாவில் சைவவித்தியாலயத்திற்கு செல்லும் 3 சிறுவர்கள் உள்ள நிலையில் அவர்களது போக்குவரத்திற்காக துவிச்சக்கர வண்டி பெற்றுத்தருமாறும் இக்குடும்பத்தின் சார்பில் கேட்டுள்ளார்கள். அதற்கான உதவிகளை செய்ய முன்வருவோர் ‘எனது ஊர் காரைநகர்” உடன் தொடர்பு கொள்ளலாம்.

416 821 8390

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் காரைநகர் முன்பள்ளி மாணவர்கள் 70 பேருக்கு சிறுவர் சேமிப்பு கணக்கு திறந்து வைக்கப்பட்டது! |2022

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய திருப்பணி | Jun.2022