கனடா காரை கலாசார மன்றம்…! 28.04.2024 கடந்த வருடம் முதல் இன்று வரை 18 மாதங்களாக நடந்தது என்ன…!

கனடா காரை கலாசார மன்றம்…!

28.04.2024 கடந்த வருடம் முதல் இன்று வரை 18 மாதங்களாக நடந்தது என்ன…!

அறிந்து கொள்ள கனடா வாழ் காரைநகர் மக்கள் மட்டுமன்றி அனைத்துலக காரை மக்களும் ஆர்வத்துடன் இருந்தாலும் வாயை திறந்தால் கோர்ட் நோட்டீஸ் வந்துவிடுமோ என்கிற பயமோ அல்லது சேத்தில மூழ்கி வந்த பன்றி ஒன்று எதிர நிக்கிறது என்ன செய்தாலும் சேதாரம் எமக்கு தான் என்று ஒதுங்கிக்கொண்டார்களோ தெரியாது.

28.042024 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் அனைத்து வகையிலும் முரண்பட்ட வகையில் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அது என்ன அனைத்து வகையிலும்….?

1. தெரிவு செய்யப்படும் வரையிலும் முத்து பொன்னம்பலம் கனடா காரை கலாசார மன்றத்தின் வருடாந்த அங்கத்தவராக $20 செலுத்தி, விண்ணப்பபடிவத்தில் கையொப்பமிட்டு இணைந்து கொண்டவர் அல்ல. ஆயுட்கால அங்கத்தவரும் அல்ல.

2. கனடா காரை கலாசார மன்றத்தின் மீதும், அதன் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள் உட்பட வெளிநாடுகளில் இயங்கும் காரை அமைப்புக்களின் நிர்வாக அங்கத்தவர்கள 19 பேருக்கு எதிராக கனடிய நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்.

3. தனது சொந்த தகப்பனாரும் ஆங்கில ஆசிரியருமான பொன்னம்பலம் மாஸ்ரர் கனடா காரை கலாசார மன்றத்திற்கு 50,000 ரூபா 2015ம் ஆண்டு காரைநகர் பாடசாலைகளின் நிரந்தர வைப்புக்காக வளங்கியதையடுத்து தனது சொந்த தகப்பனாரிற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததுடன், கனடாவில் முதியோர் கொடுப்பனவை பெற தகுதியற்றவர் எனவும், தனது தகப்பனாருக்கு இலங்கையில் பென்சன் பணம் வருகிறது என்பதனையும் காரணம் காட்டி, அதுவரை தனது தகப்பனாருக்கு அவ்வப்போது வழங்கிய நிதியனைத்தையும் கோர்ட் மூலம் மீளக்கேட்டிருந்தார். அதனை ஏற்று மாதாந்தம் $50 டொலர்கள் சாகும்வரை வழங்கவும் கோர்ட் ஓடர் வழங்கியிருந்தது.

4. அதன் காரணமாக 2022 கொரோனா காலத்தின் போது அவரது தகப்பனார் காலமான போது குடும்பத்தின் தலைமகனாக இருந்தும் இறுதிக்கடனை செலுத்தவோ அன்றி சுகயீனம் காரணமாக நீண்ட காலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் பார்வையிடவோ சென்றதில்லை.

5. முத்து பொன்னம்பலம் பொறியியலாளர் என்ற முகதாவில் வடமராட்சியை சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்து சிங்கப்பூரில் குடும்பம் நடாத்தி கனடாவிற்கு குடிபெயர்ந்த போதிலும், தனது மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்து வாழ்க்கை நடாத்தி வருபவர்.

6. அது அவருடைய சொந்த பிரச்சனை என்றும் அதை இதில் ஏன் எழுத வேண்டும்… என நீங்கள் யோசிப்பது கேட்கிறது… ஆனால் இது ‘கனடா காரை கலாசார மன்றம்’ ஆமாம் இது காரைநகர் மக்களின் கலாசார மன்றம்.

அவர் கனடாவில் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் காரைநகர் கலாசார மன்றத்திற்கு தலைவராகம் தகுதி இல்லை.

7. உலக்தின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் கனடா நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்.

8.எங்கு வாழ்கிறார்..? எப்படி வாழ்கிறார்..? யாருடன் வாழ்கிறார்…? என்று எவருக்குமே தெரியாத வகையில் கனடிய தபால் கந்தோர் ஒன்றில் P.O.box ஒன்றைப்பெற்று அது மட்டுமே அவருடைய விலாசமாக கோர்ட்டிலும் தனது அடையாளமாகவும் பயன்படுத்தி வருகிறார். சொந்த விலாசம் கூட சொல்ல முடியாதவர் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர்….! விசித்திரமாக தெரியவில்லையா.

9.கடந்த வருடம் 28.04.2025 அன்று பொதுக்கூட்டத்தில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட போதும் நேரடியாகவோ அல்லது வீடியோ உரையாடல் மூலமாகவோ கலந்து கொள்ளவில்லை, சாதாரண குரல் பதிவினூடாக தான் லைனில் நிற்கிறேன் என கண்காணாமல் கலந்து கொண்டவர்.

மேலும் பல நம்ப முடியாத காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இவை எல்லாம் தெரிந்தும் சேத்தில மூழ்கி வந்த பன்றியை ஏன் தலைவராக்கினீர்கள் என்று நீங்கள் இப்ப கேள்வி கேட்க வேணும். கேளுங்கள்…? கேட்டால் தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்… கேட்காது போனால் பதில் கிடைக்காது…

இந்த முகதூலில் இந்த பக்கத்தில் இதற்கான ‘comment’ பகுதியில் 100 நபர்கள் எப்போது ‘பதில் சொல்லுங்கள் என்று கேட்கிறார்களோ அன்று அதற்கான எனது பதில் வெளியாகும்.

மேலே கூறியவை அனைத்தும் எந்தளவு ஆதாரங்களுடன் உண்மையானதோ அந்தளவு பதிலும் உண்மையானதும் ஆகும்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 6.30 சற்று முன்னர் இறைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

திரு.முத்து பொன்னம்பலம், தலைவர் கனடா காரை கலாசார மன்றம்..!

Leave a Reply