ஊர் மக்களின் பேராதரவுடனும் காரைநகர் அபிவிருத்தி சபையின் மேற்பார்வையுடனும் பொதுப்பணியாக நடைபெற்ற கேணி இறைப்பு:
12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர் காரைநகர்” ஊடான முயற்சியுடன் இறைத்து சுத்திகரிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் வதியும் இப்பகுதியை சேர்ந்த அன்பர்கள் பேராதரவு வழங்கவும் பொதுப்பணியாக சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. காலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பணி மாலை 3 மணியளவில் நிறைவு பெற்றது. பார்வையாளர்களாக கலந்து கொண்டு ஆதரவு வழங்கியவர்களும் இதுவொரு தனிப்பணி அல்ல பொதுப்பணி என மீண்டும் ஊரவர்களிற்கு உணர வைத்து ஊக்குவிப்பு வழங்கிய ஆர்வலர்களுக்கு மிக்க நன்றி.
காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகத்தினர், காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் திரு.செல்லையா சிவகுமார்(ஆனந்தன்), இப்பகுதி கிராமசேவகர்(GS) மயூரன் ஆகியோரிற்கு சிறப்பு நன்றி.
‘கேளுங்கள் தரப்பட்டும், தட்டுங்கள் திறக்கப்படும்..’ என்னும் வாக்கிற்கு இணங்க குறுகிய ஐந்து நாட்களில் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவியை வழங்கியவர்கள் இக்கேணிக்கு மட்டுமன்றி மேலும் இதன் மூலம் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக மற்றுமோர் கேணி இறைப்பதற்கும் தேவையானளவு நிதி அனுப்பி வைத்துள்ளார்கள். அவர்களிற்கு மனமார்ந்த நன்றி.
ஐந்து நாட்களில் நிதியுதவி வழங்கியவர்கள் விபரம்:
1. தீசன் திரவியநாதன்(கனடா): 10,000 ரூபா
2.செல்லையா சிவகுமார்(ஆனந்தன், காரைநகர்): 1,000 ரூபா
3.வேலுப்பிள்ளை ஈசன்(பிரான்ஸ்): 20,000 ரூபா
4.ஆறுமுகம் செந்தில்நாதன்(சுவிஸ்): 10,000 ரூபா
5.நடராசா லோகன்(இலண்டன்): 10,000 ரூபா
6.திருமதி.சுந்தரேஸ்வரி ச ச்சிதானந்தன்(கனடா): 10,000 ரூபா
7.அமரர் கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி ஞாபகர்த்தமாக மகள் உமா குகன்( UK): 10,000 ரூபா
8.பிரபாகரன் சுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா): 20,000 ரூபா
9.