பொதுப்பணிக்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் திறந்து காட்டிவிடவேணும். அதிலும் நாலு பேருடன் சேர்ந்து ஒரு பணியை செய்தால் அது 50 ரூபா பெறுமதி என்றாலும் சொல்லிடவேண்டும். அல்லது நாலு வருசம் கழித்து யாரோ ஒருவன் நாறடிச்சுவிடுவான்.
ஆனால் இன்று ஒரு நல்ல நாள். பத்து பேருடன் சேர்ந்து ஒரு நல்ல காரியம் செய்தோம். ஆனால் கடைசிவரை நான் சொல்லவே மாட்டேன்.
இப்பிடி ஒரு சந்தர்ப்பம் என் வாழ்நாளில் வரும் என்றுகூட நான் எதிர்பார்த்திருக்கமாடேன்.
விதிவிலக்குகள் எல்லாவற்றிலும் உண்டு. இரண்டாவது நபர் சம்பந்தப்பட்டாலே அது பொது என்று அத்தனையும் போட்டு உடைகும் எனக்கு பத்து பேருடன் சேர்ந்து செய்தாலும் வெளியில் சொல்ல கூடாது என்கிற செயற்பாடுகளும் உண்டு என்பதை எனது அனுபவம் இன்று எனக்கு உணர்த்தியது.
அந்த பத்து பேர்களிற்கும் வாழ்த்துக்கள். இது உங்கள் தர்ம கணக்கில் வைப்பில் இடப்படும். Unfortunately there is no receipt what you have done.