Nov 14,2024 இலங்கையில் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கப்போகின்ற பாராளுமன்ற தேர்தல் நாள். இலங்கை அரசியலில் காரைநகரில் இருந்தும் பாராளுமன்றம் சென்றவர்கள் உள்ளனர், பாராளுமன்றம் செல்வதற்கு தமது ஓட்டுக்களை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை காரைநகர் மக்கள் தீர்மானித்த வரலாறுகளும் காரைநகரிற்கு உண்டு.
அந்த வகையில் எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆறு(6) பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கையின் பெரும்பாண்மை ஆட்சி கொண்ட நாடாளுமன்றத்திற்கு அனுப்ப யாழ் மாவட்ட மக்கள் தமிழ் கட்சி வேட்பாளர்களுக்கோ அல்லது தமிழ் சுயேட்சை வேட்பாளர்களிற்கோ தான் தமது வாக்குகளை செலுத்த வேண்டும்.
அதற்கான காரணங்கள் பல இருந்தாலும் யாழ்நகர மக்கள் அறிந்ந்து கொள்ள வேண்டிய சில விடயங்களாவன:
1). பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரே பிரதமர் ஆவது என்பது உறுதி என்பது.
2). பெரும்பான்மை இனத்தவர்கள் போடும் வாக்குகள் மட்டும் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த ஒரு பிரதமரையும் பெரும்பான்மை இனத்தவர்களை பாராளுமன்றம் அனுப்புவதற்காக பெரும்பாண்மையவர்களின் கட்சிகள் ஊடாக தமது வாக்குகளையும் செலுத்துவார்கள்.
3). பெரும்பான்மை இனத்தவரே பிரதமராகவும், பெரும்பாண்மை இனத்தவர்களே பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், பெரும்பான்மை இனத்தவரின் கட்சியே பெரும்பான்மை யை பெற்று ஆட்சி அமைக்கப்போகின்றது என்பது திடமாக தெரிந்த பின்னரும் நாம் யாழ் மாவட்டத்தில் இருந்து ஆறு பேர்களையாவது தமிழ் கட்சிகளில் இருந்தோ அல்லது தமிழ் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டி போடுபவர்களையோ நாம் ஏன் அனுப்ப கூடாது….!
4). நீங்கள் யாருக்கு வோட்டு போட்டாலும் பெரும்பாண்மை கட்சியும் பெரும்பான்மை இனத்தவர்களும் தான் நாட்டை ஆழப்போகிறவர்கள் ஆனால் அங்கே தமிழர்களின் பிரசன்னமும் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் ஆறு பேர்களை நாம் ஏன் அனுப்ப கூடாது…!
5). பெரும்பான்மை இனத்தின் கட்சியில் தமிழர் ஒருவர் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றாலும் அது பெரும்பான்மை இனத்தின் அடக்கு முறையை தமிழர்கள் நாம் ஏற்றுக்கொள்வதாகவே அமையும்.
6). தமிழ் கட்சிகள், தமிழ் வேட்பாளர்களிற்குள் கடந்த காலங்களிலும் தற்போதும் பல்வேறு உட்கட்சி பூசல்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் இருந்தாலும், கடந்த காலங்களில் இவர்களால் எதனை சாதிக்க முடிந்தது என நீங்கள் கேள்வி மேல் கேள்விகள் கேட்டாலும், அதைவிட கொடுமையானது பெரும்பான்மை இன கட்சிக்கு வோட்டு போடுவது.
7). தமிழர்களின் வோட்டுக்கள் தமிழ் கட்சிகளிற்கும் தமிழ் வேட்பாளர்களிற்கும் போடப்பட்டது என்பதே பெரும்பான்மை இனத்திற்கு கொடுக்கின்ற செய்தியாக அமையும்.
8. பெரும்பான்மை இன கட்சிக்கும் அதன் வேட்பாளர்களிற்கும் தமிழர்கள் போடுகின்ற வோட்டு பெரும்பான்மை இனத்தின் அடக்கு முறைகளையும், பெரும்பான்மை இனத்தின் விகிதாசார கோட்பாடுகளையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்கிற கருத்தையே வெளிப்படுத்தி நிற்கும்.
9). யாழ் மாவட்ட மக்களே, காரைநகர் மக்களே…கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள இடதுசாரி அரசியலும், இளையவர்களின் அரசியலும் விழிப்புணர்வு பெற்றுள்ளதால், அதற்கு ஏற்றவர்களை பெரும்பான்மை இனத்தவர்களே அந்த கட்சிகளில் இருந்து அவர்களை பாராளுமன்றம் அனுப்புவார்கள்.
10). யாழ் மாவட்டத்தில் இருந்து செல்லும் குறைந்த பட்ச ஆறு வெற்றி பெற்ற வேட்பாளர்களால் நீங்கள் எதிர்பார்க்கின்ற அநுர கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை, ஆனால் யாழ் மாவட்டத்தில் இருந்து சென்ற அத்தனை வேட்பாளர்களும் சுயேட்சையாக அல்லது தமிழர் கட்சிகளில் இருந்து சென்றார்கள் என்ற செய்தியை பெரும்பான்மை யினத்தவர்களிற்கு சொல்ல வேண்டிய கடமையும் கடப்பாடும் ஒவ்வொரு இலங்கை தமிழர்களிற்கும் உண்டு.
11). எனக்கு போடாவிட்டாலும் பரவாயில்லை யாராவது ஒரு தமிழ் கட்சி வேட்பாளருக்கு அல்லது தமிழ் சுயேட்சை வேட்பாளருக்காவது உங்கள் வோட்டை வழங்குங்கள் என்று சொல்வதற்கோ அல்லது கேட்பதற்கோ எந்த தமிழ் வேட்பாளரும் தயாராக இல்லாத நிலையில் உங்கள் வோட்டு ஒரு தமிழ் கட்சிக்கோ அல்லது தமிழ் சுயேட்சை வேட்பாளருக்கோ தான் இருக்க வேண்டும் என்ற ஆழமான அரசியல் கண்ணோட்டத்தின் பின்னணியில் தான் இதனை உங்கள் சிந்தனைக்காக தெரிவிக்கின்றேன்.
29.10.2024 இன்று காரைநகரிற்கு தனது தேர்தல் பரப்புரைக்காக சென்ற எம் எல்லோரினது நண்பரும் காரை மக்களையும் காரை மண்ணின் அபிவிருத்திகளையும் நன்கு அறிந்தவரும் இலங்கை அரசியலில் கொள்கையோடு அரசியல் பயணத்தில் பயணிப்பவரும் யாழ் மாநகர சபை முன்னாள் மேயருமான திரு.வி.மணிவண்ணன் அவர்கள் காரை மக்களிடம் தனது வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
மக்களின் தோழனாக யாழ் மாநகர சபை மேஜராக கடந்த காலங்களில் பணியாற்றிய திரு.வி.மணிவண்ணன் அவர்களை ‘எனது ஊர் காரைநகர்’ சேவையாளர் கெளரவிப்பின் போது பிரதம அதிதியாக வரவேற்று கெளரவம் செய்தது.
யாழ் மாவட்டத்தில் இருந்தும் வன்னியில் இருந்தும் இலங்கையின் பெரும்பான்மையின பாராளுமன்றத்திற்கு செல்லவும் அங்கு சிங்கத்தின் குகையில் கற்சிக்கத் தெரிந்தவர்களையும் அனுப்புவதன் மூலமே இலங்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற செய்தியாவது வெளியுலகத்திற்கு தெரிய வரும்.
திரு.வி. மணிவண்ணன் அவர்கள் தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக இலக்கம் 9 இல் போட்டியிடுகிறார்.
சட்டத்தரணியாகவும், யாழ் நகரில் பரந்து வாழும் காரை மக்களின் நண்பனாகவும் எமது மண்ணிற்கும் பணியாற்ற வாழ்த்துவோமாக.