காலம் கடந்து உண்மையை விளங்கிக்கொள்ளும் காரைநகர் அபிவிருத்தி சபை.!
24.07.2024 கடந்த யூன் மாதம் பனை விழுந்து தமது வாழ்வாதார குடிசையையும் இழந்து நிற்கதியான மூன்று குழந்தைகளையுடைய ஊரி கிராம குடும்பத்தின் நிலையறிந்து கிராமசேவகரின் உதவியுடன் 28.07.2024 அன்று தற்காலிக குடிசை வீடு அமைக்க ‘எனது ஊர் காரைநகர்’ ஊடான அறிவிப்பை தொடர்ந்து 215,000 ரூபா கொடுக்க முன்வந்தவர்களிடம் இருந்து முதற்கட்டமாக நான்கு நாட்களில் வழங்கப்பட்ட 77,400 ரூபாவினை வழங்க முடியாது இருந்த பணத்திற்கு 10 வாரங்கள் கழிந்த நிலையில் அந்த குடும்பத்தினருக்கு 77,200 ரூபா பெறுமதியிலான உபகரணங்களை காலம் கடந்த நிலையில் பெற்றுக்கொடுத்து சாதனை படைத்துள்ளது காரைநகர் அபிவிருத்தி சபை.
முதற்கட்டமாக காரைநகர் அபிவிருத்தி சபையூடாக வழங்கப்பட்ட நிதியினை, உரியவர்களிடம் வழங்க காரைநகர் அபிவிருத்தி சபை மறுத்த நிலையில், 05.08.2024 அன்று நேரடியாக சென்று சேர்த்த மிகுதிப்பணமான 138,000 ரூபாவினை வழங்கி தற்காலிக குடிசை வீட்டை அமைக்கும் வேலையை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் பின்னரும் காரணங்கள் மேல் காரணங்களை கூறிவந்த காரைநகர் அபிவிருத்தி சபையினரின் செயற்பாடுகளையடுத்து காரைநகர் சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. கலைக்குமரன் உதவியோடு காரைநகர் பிரதேச செயலரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது, அதன் பின்னரும் காலம் தாழ்த்தி வந்த காரைநகர் அபிவிருத்தி சபை தற்போது உரியவர்களிற்கு 77,200 ரூபா பெறுமதியிலான கட்டிட பொருட்களை பெற்றுக்கொடுத்துள்ளதாக அறிய முடிகிறது. பெற்றுக்கொண்ட பொருட்களிற்கான உறுதியினையும் அதற்கான ரசீதையும் அறியத்தந்திருக்கிறார்கள்.
மேற்கொண்டு மழைகாலம் ஆரம்பித்திருப்பதாலும், காலநிலை பாதுகாப்பு மற்றும் பாடசாலை செல்லும் பிள்ளைகளையுடைய குடும்பத்தின் தற்காலிக வீட்டிற்கு வாயிற்கதவு மற்றும் நிலம் போடுவதற்காக மேலதிகமாக இன்னமும் ஒரு இலட்சம் ரூபா வரை தேவை உள்ளதாகவும் அறியப்படுத்தியுள்ளார்கள்.
உங்களது நேரடி உதவிகளை பயனாளிகளிடமே கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க முடியும். நம்புங்கள் ‘எனது ஊர் காரைநகர்’ எதை சொன்னாலும் எதை செய்தாலும் அது சத்தியத்திற்கும் கடவுளுக்கும் கட்டுப்பட்ட வகையில் நியாயமானது என்பதனை கடந்த 15 ஆண்டுகளில் நிரூபணம் ஆகியுள்ளது.