முன்பள்ளிகளின் நீண்டகால நிரந்தர வளர்ச்சிக்கு கைகொடுப்போம்.

முன்பள்ளிகளின் நீண்டகால நிரந்தர வளர்ச்சிக்கு கைகொடுப்போம்.

12.07.2024 அன்று அத்திவாரம் இடப்பட்ட படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளியின் வளர்ச்சியும் கல்வி செயற்பாடுகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சி கண்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆனாலும் முன்பள்ளிக்கான நிரந்தர வகுப்பறைகளோ அல்லது பெளதீக வளங்களோ அற்ற நிலையிலும் வருடந்தோறும் 35 முதல் 40 வரையான பாலர்கள் தமது முதல் கல்வியை ஆர்வத்துடன் பயில்வதற்கு புதுறோட் சந்திக்கு அண்மையிலுள்ள தனியார் வீடு ஒன்றில் நடாத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களிற்கு முன்னர் புதுறோட் கிழவன்காடு கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள அமரர் ஜெ. தில்லையம்பலவாணர் அவர்களுடைய காணியின் ஒரு பகுதியை சலுகை விலை அடிப்படையில் அம்பாள் முன்பள்ளிக்கு விற்பதற்கு திருமதி.ஜெ. தில்லையம் பலவாணர் அவர்கள் முன்வந்ததையொட்டி ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் மற்றும் ஒரு சில அன்பர்களது நிதி உதவியுடன் அம்பாள் முன்பள்ளி நிர்வாகத்தினருடன் இணைந்து இக்காணி முன்பள்ளிக்காக வேண்டப்பட்டது.

முன்பள்ளிக்கான கட்டிடப்பணிகளை ஆரம்பிக்க தனியார் ஒருவரது முயற்சியால் அத்திவாரமும் இடப்பட்டது. ஆனாலும் கோவிட் பெருந்தொற்று காரணமாக தடைப்பட்ட கட்டிடப்பணிகள் மேற்கொண்டு முன்னெடுத்து செல்ல முடியாதளவிற்கு தடைப்பட்டது.

அதன்காரணமாக இவ்வாண்டு ஆரம்பம் முதல் குறைந்த செலவில் புதிய கட்டிட மாதிரிக்கான வரைபு பெறப்பட்டு “பிள்ளையார் சனசமூக நிலைய” நிர்வாகத்தின் கீழ் நடைபெற்றுவரும் அம்பாள் முன்பள்ளி செயற்பாடுகளின் பிரகாரம் வேண்டப்பட்ட புதிய காணியில் முன்பள்ளி கட்டிடத்திற்கான அத்திவாரம் கடந்த மாதம் 12.07.2024 அன்று இடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கல்விக்காக காரை சிறார்களின் எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டு காரை மக்களிடம் நிதி சேகரிக்கும் பணியில் பிள்ளையார் சனசமூக நிலைய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணளவாக ஒன்றரை கோடி ரூபா செலவில் அமையவுள்ள முன்பள்ளி கட்டிடத்திற்கு அத்திவாரம் இடப்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் வாழ்ந்துவரும் கல்வியாளர்கள் தமது பங்களிப்பினை செலுத்தி வருகின்றனர். முதல் கட்டமாக கல்விக்காக நிதி வளங்க முன்வரும் பரோபகாரிகள் ஒரு இலட்சத்திற்கு மேல் வழங்க முன்வருபவர்கள் ஒருவருட காலத்தினுள் பகுதி பகுதியாக கட்டிட பணிகளின் போது “பிள்ளையார் சனசமூக நிலைய” நிர்வாகத்தினரிடம் செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ளவும் வசதியாக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை 50 இலட்சம் ரூபாய்களிற்கு மேற்பட்டளவில் பரோபகாரிகள் அம்பாள் முன்பள்ளி கட்டிட நிதிக்காக உதவ முன்வந்து தமது நன்கொடையை பதிவு செய்துள ளனர்.

“எனது ஊர் காரைநகர்” தீசன் திரவியநாதன் – 5 இலட்சம் வளங்க முன்வந்துள்ளதோடு முதல் கட்ட நிதியாக இரண்டரை இலட்சம் ரூபாய்களை 05.08.2024 அன்று வளங்கிவைக்கப்பட்டது. அத்துடன் இலண்டனில் வதியும் திரு.தியாகராசா திருப்பதிராசா அவர்கள் முதல் கட்டமாக ஒரு இலட்சம் ரூபாய்கள் வளங்கியுள்ளார்.

அம்பாள் முன்பள்ளின் நிர்வாகம் ‘பிள்ளையார் சனசமூக நிலையத்தின் ஊடாக நிர்வகிக்கப்பட்டு வருவதுடன் பிள்ளையார் சனசமூக நிலையத்தினரால் கட்டிடப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிள்ளையார் சனசமூக நிலைய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு:

தலைவர்: திரு. நாகலிங்கம் பாலகிருஸ்ணன்

உபதலைவர்: திரு. கணபதிப்பிள்ளை நிமலதாசன்

செயலாளர்: திரு.விஷ்வலிங்கம் வைகுந்தவாசன்

உபசெயலாளர்: திரு.பா.சிவறஞ்சன்

பொருளாளர்: திரு.இராசையா சண்முகராசா

நிர்வாக சபை உறுப்பினர்கள்:

முன்பள்ளிகளின் நிரந்தர வளர்ச்சிக்கு கைகொடுக்கும் வகையில் வெளிநாடுகள் வாழ் காரை மக்கள் நேரடியாகவோ அன்றி ‘எனது ஊர் காரைநகர்’ காரை நியூஸ் தொகுப்பாளர் தீசன் திரவியநாதன் ஆகிய என்னை தொடர்புகொள்வதன் ஊடாக உங்கள் நன்கொடை நிர்வாகத்தினரிடம் முறையாக செல்வதையும் தங்களுக்குரிய பற்றுச்சீட்டினை பெற்று தருவதிலும் அக்கறையுடன் செயற்படுகிறேன். “பிள்ளையார் சனசமூக நிலையத்தினரிம் நேரடி வங்கி கணக்கு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு மாணவர் வருகையை அதிகரிக்க வழங்கப்படும் ஊக்குவிப்பு நிதி 25,000 ரூபா சிவகெளரி முன்பள்ளிக்கு வழங்கப்பட்டது.

கலைகள் மேல் பற்றுக்கொண்ட காதலன்’ எங்கள் ஊர் அண்ணன் MGR