‘நோக்கம் சரியானது எனின் வழி பிறந்தே தீரும்’
காரை இந்து மாணவனிற்கான கற்றலுக்கான உதவி கிடைத்தது.
காரை இந்துக்கல்லூரியில் Bio Science பாடத்தில் உயர்தர கல்வி பயின்று வரும் மாணவனிற்கு மேலதிக கற்றலுக்கான நிதியுதவி வேண்டி 23.08.2024 கடந்த வெள்ளிக்கிழமை எடுத்து வரப்பட்ட வேண்டுகோளிற்கு உடனடியாக உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பலர் இம்மாணவனிற்கு உதவ முன்வந்துள்ளனர். எல்லோரது பங்களிப்பினையும் ஏற்று இம்மாணவனிற்கான
உதவி வழங்கப்படுகிறது.
பிரித்தானியா இலண்டனில் வதியும் கலாநிதி ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் இரண்டு வருடத்திற்குரிய முழுமையான நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள போதிலும் மேலும் சில அன்பர்களும் தமது உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர். அவர்களையும் இணைத்துக்கொண்டு முதல் கட்டமாக 26.08.2024 இன்று திங்கள்கிழமை ஒரு வருடத்திற்கும் மேலாக, தேவைப்படும் கற்றலுக்கான நிதியுதவி காரை இந்து பழைய மாணவர் சங்க வங்கி கணக்கில் இடப்பட்டுள்ளது.
1. ஆறுமுகம் நல்லநாதன் (இலண்டன்) – 60,000 ரூபா
2. ரகுநாதன் சிவபாதசுந்தரம்( கனடிய நண்பன்) – 75,000 ரூபா
3. விக்கினேஸ்வரன் இராமச்சந்திரன் (கொழும்பு) – 24,000 ரூபா
4. சிறிகரன் இந்திரன் (கனடா) – 24,000 ரூபா
5. Mr. G.S (கனடா, ஆயிலி காரைநகர்)- 48,000 ரூபா
6. தீசன் திரவியநாதன்( கனடா) – 24,000 ரூபா.
காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரின் குறிப்பறிந்து ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக முன்வந்து செய்யப்படும் கற்றலுக்கான இவ்வுதவி பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக தற்போதைய அதிபர் திரு.அ. ஜெகதீஸ்வரன் தலைமையிலான நிர்வாகத்தினரால் அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளிற்கு வழங்கப்பட்டு நிர்வகிக்கப்படும் என்பதுடன் அதனை ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் நிதி வழங்குனர்களிற்கு உரிய முறையில் தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன் என்பதனையும் பழைய மாணவர் சங்க வரவு செலவு அறிக்கையினை அவதானிப்பதோடு, உதவி பெறும் மாணவனையும் நேரடியாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்பதனையும் இத்தாழ் உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.
தொடர்புடைய செய்தி