ஆழ்ந்த அனுதாபங்கள்!
காரைநகர் இந்துக்கல்லூரியின் மூன்று தசாப்தகால முன்னாள் ஆசிரியையும், ‘எனது ஊர் காரைநகர்’ வழங்கிய ‘காரைநகர் சேவையாளர்’ கெளரவம் பெற்றவருமான திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் ( அருமைநாயகம் ரீச்சர்) அவர்கள் 25.07.2024 அன்று மூளாய் கிழக்கு அவரது இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காரைநகர் இந்துக்கல்லூரியில் 1970 களில் இறுதியில் வர்த்தகம், தமிழ், சமயம் பாடங்களை கற்பிக்க தொடங்கி 1980 களிலும் 1990 களின் இறுதிவரை தொடர்ந்து 23 ஆண்டுகளாக மூளாயில் இருந்து வருகை தந்து காரைநகரில் ஆசிரியப் பணியாற்றிய பெருந்தகை.
1990களில் எங்களது வகுப்பு ஆசிரியையாகவும் தாய் அன்போடு கல்வியை போதித்த குருவானவனர்.
2023.01.01 அன்று ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com ஊடாக வழங்கப்பட்ட ‘காரைநகர் சேவையாளர்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
காரை மண்ணை விரும்பி வந்து இரண்டு தசாப்த்தங்களிற்கு மேலாக காரை இந்துவில் கல்வி போதித்த எம் குரு. 1973 பிறந்து காரை இந்துவில்’A’ வகுப்பில் கல்வி கற்ற எங்களின் வகுப்பு ஆசிரியை.
அன்னாரது மறைவு காரை இந்துவிற்கும் அவரிடம் கல்வி பயின்ற பலருக்கும் பெரும் துயராக அமைந்துள்ளது.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 27.07.2024 சனிக்கிழமை அன்னாரது மூளாய் கிழக்கு இல்லத்தில் நடைபெறும் என்பதனையும் அறியத்தருகிறார்கள்.( மூளாய் பிள்ளையார் கோயில் முன்னாள் செல்லும் வீதியில் அண்ணளவாக இரண்டு km தூரத்தில் அன்னாரது வீடு அமைந்துள்ளது).
காரை மண்ணை தேடி வந்து இரண்டு தசாப்தங்களிற்கு மேலாக கல்வி புகட்டிய எங்கள் ஆசான் அருமைநாயகம் ரீச்சர் அவர்கள் திண்ணபுர சிவன் காலடியில் நிம்மதி பெருவாழ்வு பெற எல்லாம்வல்ல எங்களூர் ஈசனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அன்னாரது கும்பத்திற்கு 1973 காரை இந்து பழைய மாணவர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓம் சாந்தி.