கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..! 28.10.2026.
கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..! 28.10.2026.
– உங்களால் கீழே உள்ளவற்றை முழுமையாக வாசிக்க முடியாது..
– வாசித்தாலும் அவற்றை விளங்கிக்கொள்ள முடியாது…
– விளங்கிக்கொண்டாலும் அதற்காக உங்களால் செயற்பட முடியாது…
– செயற்பட்டாலும் உங்களால் திடமாக நிற்க முடியாது…
– திடமாக நிற்க முடியும் என்றால் தொடர்ந்து வாசியுங்கள்..!
– சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை…
28.04.2024 அன்று நடைபெற்ற கனடா காரை கலாசார மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் தலைவர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த திரு. முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் அன்றைய தினம் தற்போதைய நாடுகளின் தொடர்பாடல் முறைமைகளின் அடிப்படையில் ‘Zoom’ செயலி ஊடாக குரல் பதிவின் ஊடாக கலந்து கொண்டு தலைமைப்பதவியை பெற்றிருந்தார்.
2006ம் ஆண்டு முதல் கனடா காரை கலாசார மன்றத்தில் அடிப்படை அங்கத்தவர் சந்தாபணம் கூட கட்டி அங்கத்தவராக இணைந்து கொள்ள முடியாத ஒருவரான திரு. முத்து பொன்னம்பலம் என்பவரை தலைவராக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை சிலருக்கு ஏற்பட்டிருந்த காரணத்தினால் 2024ம் ஆண்டுக்கான அங்கத்துவ பணம் $20 டொலர்கள் வேறு நபர் ஒருவரினால் செலுத்தப்பட்டு அந்த ஆண்டுக்கான அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
28.04.2024 அன்று தலைவர் பதவியை பெற்றுக்கொண்ட திரு.முத்து பொன்னம்பலம் எனப்படுபவர் கனடா காரை கலாசார மன்றத்தின் இமெயில் முகவரி, இணையத்தளம் தொடர்பான விடயங்கள் அன்றே அப்போதே தரப்பட வேண்டும் எனவும், கணக்கு வழக்கு மற்றும் இதர மன்றத்தின் சொத்துக்கள் வெறும் $5,000 டொலருக்கும் உட்பட்டது தானே தனக்கு அவை எதுவும் தேவை இல்லை எனவும் பொதுவில் தெரிவித்திருந்தார்.
ஆனபோதிலும் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த 35 வருட செயற்பாட்டில் நிர்வாக மாற்றுக்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை பின்பற்றவும் உத்தியோக பூர்வமான கையளிப்பு ஒன்றினை ஒரு மாதம் அல்லது குறைந்தது 2 வாரங்களிற்குள் முன்னைய நிர்வாகம் செயற்படுத்தவும் தீர்மானித்த போதிலும்…
திரு. முத்து பொன்னம்பலம் அவர்களை தலைவராக்கிய சிலர் பொதுச்சபையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டு அன்றைய தினமே கனடா காரை கலாசார மன்றத்தின் உத்தியோகபூர்வ இமெயில், இணையத்தளம் என்பவற்றினை நிர்வாகிக்கும் விபரங்களை பெற்று திரு. முத்து பொன்னம்பலத்திடம் வழங்கியிருந்தனர்.
திரு.முத்து பொன்னம்பலம் கடந்த 2015ம் ஆண்டு கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளிற்கு வழங்கப்பட்ட நிதி தொடர்பில் தொடர்ச்சியாக அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் அந்த நிதி செயற்பாடுகள் தொடர்பாக அன்றைய நிர்வாகத்தின் மீது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டுக்களை இன்றுவரை முன்வைத்து வருபவர் என்பது மட்டுமல்ல அந்த நிதி செயற்பாட்டைசெயற்படுத்திய நிர்வாகத்தின் மீதும் அப்போதைய செயலாளர் ஆகிய தீசன் திரவியநாதன் ஆகிய என்மீதும் தனது சொந்த நலனை கருத்தில் கொண்டு தனது மானம் போய்விட்டதாக கனடாவில் ‘மானநஷ்ட ஈடு’ வழக்கினை 2017ம் ஆண்டு தொடர்ந்திருந்தார்.
கடந்த பத்து வருட காலமாக விசாரணைக்கு வராத அந்த வழக்கு மூலம் வக்கீலுக்கான பணச்செலவாக என்னை 15,000 டொலர்கள் வரை செலவு செய்ய வைத்துள்ளதுடன் தொடர்ந்து 2023ம் ஆண்டு முதல் இன்று வரை கனடிய கோர்ட்டிலே நகர்த்தல் பத்திரம் ஒன்றை நகர்த்திக்கொண்டுள்ளார்.
இன்றுவரை விசாரணைக்காக என்மீதான போடப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கே விசாரணைக்கு வரவில்லை என்பதும் இனி ஒருபோதும் வரப்போவதில்லை என்பதுடன், இதுவரை திரு.முத்து பொன்னம்பலம் அவர்களால் என்மீது… தானே போட்ட வழக்குகளிற்கு கடந்த பத்து ஆண்டுகளாக தனக்கு ஏற்பட்ட நேரவிரயம் மற்றும் தனது கெட்டித்தனத்திற்கு பரிசாக சிலபல ஆயிரம் டொலர்களை வழங்க வேண்டும் எனவும் கோரிவருகிறார்.
கனடிய கோர்ட் முறைமைகளின் பிரகாரம் கோர்ட் விதி முறைகளை பின்பற்றி தனக்கான வழக்குகளை தானே கையாள முடியும் என்கிற விதியின் அடிப்படையில் திரு.முத்து பொன்னம்பலம் அவர்கள் என்மீது போட்ட வழக்குகள் மூலம் அறிந்து கொண்டும் அதனை முழுமையாக கற்று உணர்ந்தும் 2023ம் ஆண்டு கனடாகாரை கலாசாரமன்றம் மற்றும் காரை இந்து பழைய மாணவர் சங்கம் மற்றும் உலகளாவிய காரை அமைப்புக்களில் பொறுப்பான பதவிகளை வகித்தவர்கள் என கருதப்பட்ட 19 நபர்கள் மீது ‘மான நஷ்ட ஈடு’ வழக்கை தொடர்ந்தார்.
கவனிக்க..! கனடா காரை கலாசார மன்றத்திலோ அல்லது வேறு எந்த அமைப்பிலோ ‘நிர்வாக மோசடி அல்லது நிதி மோசடி’ என்று எந்த பொது வழக்கையும் கொண்டு செல்லவில்லை. மாறாக மேற்படி அமைப்புகளின் பொதுக்கூட்டம், நிர்வாக சபைக்கூட்டம் மற்றும் சமூக வலைத்தளங்களில் முத்து பொன்னம்பலம் ஆகிய தன்னை ‘ பைத்தியம் என்றும்’, ‘விளங்காதவன் என்றும்’ ‘தாய் தகப்பனுக்கு எதிராக கேஸ் போட்டவன் என்றும்’ குடும்பத்தை விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்பவன்’ என்றும் பொது வெளிகளில் பேசியவர்கள் என்று பல ஆயிரம பக்கங்கள் கொண்டவகையில் கோர்ட்டில் ‘மானநஷ்ட ஈடு’ வழக்கு தொடர்ந்தார்.
முதலாவது வழக்கு பதிவின் போதே 900 பக்கங்களிற்கு மேற்பட்டளவில் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்தில் வெளியான பல செய்திகளையும் விமர்சனங்களையும் தனக்கு சார்பாக மொழிபெயர்த்தும் இல்லாத அல்லாத விடயங்களை சேர்த்தும், மற்றும் ‘அந்த கூட்டத்தில் இதை சொன்னார்கள், இந்த கூட்டத்தில் இதை சொன்னார்கள்’ என்றும் 900 பக்கங்களிற்கு மேற்பட்டளவில் 19 நபர்களிற்கு எதிரான தனது ‘மான நஷ்ட ஈடு’ வழக்கை தொடர்ந்தார்.
ஆனால் இவற்றிற்கு தனிப்பட்ட எந்தவொரு நபராலும் கோர்ட் விதிமுறைகளை பின்பற்றி கோர்ட் இற்கு பதில் வளங்க முடியாது. அதன் காரணமாகவே கனடா காரை கலாசார மன்றம் வக்கீல்களை அமர்த்த முடிவு செய்தது.
திரு. முத்து பொன்னம்பலம் இதுவரை கனடா காரை கலாசார மன்றத்தின் முன்னைய நிர்வாகத்திலோ அன்றி நிதி செயற்பாட்டிலோ எந்தவிதமான அக்கறையும் கொண்டு எந்த வழக்குகளையும் முன்னெடுக்கவில்லை.
தனது காழ்ப்புணர்ச்சி, இயலாமை மற்றும் சமூகத்துடன் சேர்ந்து வாழ தகுதியற்ற சூழ்நிலைகளை தனக்கு தானே ஏற்படுத்திக்கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்.
அது மட்டுமன்றி தனது முன்னோர்கள் ஏற்படுத்திக்கொடுத்த பாணியில் ‘பிட்டிசம்’ எனப்படும் கேடு கெட்ட செயல் மூலமும் பலருக்கும் கோர்ட் அல்லாத பல நிறுவனங்களிற்கும் பொய்யான தகவல்களை வழங்கி விசாரிக்க வைத்ததுடன் அந்த நிறுவனங்களின் விலை மதிப்பில்லா நேரங்களையும் வீண்விரயம் செய்ய வைத்தவர்.
கனடா காரை கலாசார மன்றத்தின் காரைநகர் பாடசாலைகளிற்கு ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் வைப்பில் இட்டு வழங்கிய நிதி அறிக்கையை பரிசீலித்து ஒப்புதல் வழங்கிய திரு. கந்தையா கனகராசா அவர்கள் மீது Canada Revenue Agency (CRA) மீதும், CPA எனப்படும் Chartered Professional Accountant in Canada என்னும் அமைபிற்கும் பிட்டிசம் போட்டவர்.
அத்துடன் பாடசாலைகளிற்கு நிதி வைப்பில் இட்ட நிர்வாகத்தின் தலைமை வகித்த மன்றத்தின் தலைவர் திரு. தம்பிஐயா பரமானந்தராசா அவர்களிற்கும் CPA மற்றும் அவருடைய வேலைத்தளம் என்பவற்றிற்கும் பிட்டிசங்களை அனுப்பியவர். அதன் மூலமாகவும் பலருடைய விலைமதிப்பில்லா நேரங்களையும் மனவுழைச்சல்களையும் திட்டமிட்டு ஏற்படுத்தியவர்.
2015 கனடா காரை கலாசார மன்றம் காரைநகர் பாடசாலைகளிற்காக காரைநகர் அபிவிருத்தி சபையின் முகதாவில் 12 பாடசாலைகள் மற்றும கனடா காரை கலாசார மன்றம் பெயர் உள்ளடங்கலாக காரைநகர் தேசிய சேமிப்பு வங்கியில் வைப்பில் இடப்பட்ட ஒரு கோடி இருபது இலட்சம் ரூபா நிரந்த வைப்பு கடந்த பத்து ஆண்டுகளிற்கும் மேலாக (2015 – 2026) வரையான காலப்பகுதியில் மட்டும் இரண்டு கோடிகளிற்கும் மேற்பட்ட நிதியினை காரைநகர் பாடசாலைகளிற்கு வழங்கியுள்ளதுடன் மேற்கொண்டும் குறைந்த பட்சம் 10% விகித வட்டியின் பிரகாரம் வழங்கி வருகின்றது.
இந்த நிலையில் 2015 ஆண்டு இந்த நிரந்த வைப்புக்கான நிதி சேர்க்கையின் போது அந்த நிர்வாக காலம் முடிவடையும் நிலையில் தீசன் திரவியநாதன் ஆகிய நான் தனிப்பட்ட வகையில் எனது வங்கியில் Mutual fund இல் இருந்த $47,000 டொலர்களை பெற்று அதிலிருந்து சொந்த பணமாக $20,000டொலர்கள்(இன்றைய பெறுமதி 50 இலட்சம்) மற்றும் தம்பிஐயா பரமானந்தராசா $8,000 டொலர்கள் வழங்கியும் 2015.05.05 அன்று ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் காரைநகரில் பாடசாலைகளிற்காக நிரந்தர வைப்பில் இட்டு 2015.05.10 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதற்கான முருமையான கணக்கறிக்கை மற்றும் 2014 முதல் 2015 வரையான திரு. தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான இரண்டு ஆண்டுக்கான கணக்கறிக்கையில் சுமார் இரண்டு கோடி ரூபாய்கள் திரு. சிவா T மகேசன் அவர்களது தலைமையில் இயங்கிய காரைநகர் அபிவிருத்தி சபையின் வங்கி கணக்கிற்கு கனடாவில் இருந்து kasipillai & sons துரித பணமாற்று சேவை நிலையத்தினூடாக அனுப்பி வைக்கப்பட்டதும் அதனூடாக செயற்பாடுகள் நிறைவேற்றப்பட்டதும் யாவரும் அறிந்து கொண்டதுடன் அனைத்து நிதி மாற்றமும் கனடா காரை கலாசார மன்றத்தின் வங்கி காசோலை மூலம் பணமாற்று நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதும் உத்தியோக பூர்வ மன்றத்தின் வங்கி கணக்கு மற்று ரசீதுகள் மூலம் அனைத்தும வெளிப்படையாகவும் தெளிவாகவும் ஆதார பூர்வமாகவும் கனடா காரை கலாசார மன்றத்தின் ஆவணங்கள் மூலமாக அறிந்து கொள்ளப்படத்தக்கது.
இந்த நிலையில் திரு. முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் தீசன் திரவியநாதன் ஆகிய என்மீது முதன் முதலில் தீவிர பொறாமையும் ஆற்ற முடியாத காழ்ப்புணர்ச்சியும் கொண்டு 2016ம் ஆண்டு தன்னை ‘மாதன முத்தா’ என்றும் ‘மூடர் கூட்டத்தின் தலைவன்’ என்றும் மற்றும் பல சொற்களால் வர்ணித்து ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்தில் எழுதியதாக பத்து இலட்சம் டொலர்கள் கோரி ‘மானநஷ்ட ஈடு’ வழக்கு தொடர்ந்தார்.
அதனை எதித்து ஊடகமாக உண்மையைத்தான் நான் சொன்னேன் மாறாக திரு. முத்து பொன்னம்பலத்திற்கும் எனக்கும் எந்த விதமான தனிப்பட்ட கோபதாபங்கள் இல்லை எனவும் வக்கீல்கள் மூலமாக அவருடைய கோர்ட் வழக்கினை எதிர்கொண்டேன். ஆனால் திரு. முத்தா பொன்னம்பலம் அவர்கள் என்மீது போட்ட மான நஷ்ட ஈடு வழக்கை பயன்படுத்தி கனடாவில் இருட்டு அறைக்குள் இருந்தவாறு பலரையும் அச்சுறுத்தியும், மிரட்டியும் தனது செயற்பாடுகளை நிறைவேற்றி வருகின்றார்.
வக்கீல் அல்லாத முறையில் பலருக்கும் முதல் தகவல் அறிக்கை என்னும் பெயரில் ‘எனது ஊர் காரைநகர்’ சம்பந்தப்பட்ட பலருக்கும் வக்கீல் அறிக்கை போன்று ‘நீங்கள் தீசன் திரவியதாதனுடன் சேர்ந்து தன்னைப்பற்றி இவ்வாறு கதைத்துள்ளீர்கள் என்றும், எனது முகதூலில் எனது எழுத்துக்களிற்கு ‘like’ அல்லது Comment செய்பவர்களிற்கு உங்களிற்கும் வழக்கு வரும் என்றும் ஒரு சிலருக்கு காரணம் கேட்டு கடிதம் மூலம் ‘கோர்ட்’ வழக்கு வரும் எனவும் கனடிய கோர்ட் முறைகளை பயன்படுத்தி கனடாவில் பலரையும் blackmail செய்தும் வருகின்றார்.
அவர்களிற்கு எழுதிய கடிதங்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டு மிரட்டியதற்கான ஆதாரங்களும் கோர்ட் விசாரணைகளிற்காக காத்திருக்கின்றன.
இவை மட்டுமன்றி…
2023 ம் ஆண்டளவில் முன்றாள் ஜனாதிபதி கோத்தபாஜ ராஜபக்ஸ தலைமையிலான அரசிடம் தீசன் திரவியநாதன் இலங்கையிலே பயங்கரவாதத்தை மீளவும் கட்டமைக்க நிதி அனுப்புவதாகவும் இலங்கை பயங்கரவாதம் நிதி மோசடி பிரிவிற்கு மூன்று தடவைகள் ‘பிட்டிசம்’ கனடிய பொதுப்பணிகள் காரியாலயம் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.
கனடிய பொதுப்பணிகள் அலுவலகம் தொடர்ந்து எனது கனடிய செயற்பாடுகள் எனது வேலைத்தளம் மற்றும் எனது வங்கி கணக்குகள் மற்றும் இன்னோரென்ன குடும்பம் மற்றும் செயற்பாடுகளை ஆய்வு செய்து இலங்கை பயங்கரவாத புலனாய்வு துறையினருக்கு தெளிவான அறிக்கை கொடுத்துள்ளனர்.
அத்துடன் தீசன் திரவியநாதன் ஆகிய என்னை இலங்கை பயங்கரவாத புலனாய்வு துறையினர் இலங்கையில் விசாரிக்கவும் அனுமதியும் வளங்கியிருந்தனர்.
இந்த நிலையில் 2024 இல் முதன் முறையாக என்னையும் 2005 முதல் ஊர்ப்பணிகள் பலவற்றிற்கும் நிதி அனுப்பிய காரைநகரில் அரச உத்தியோகம் பார்க்கும் ஒருவரையும் தனித்தனியாக வேறு வேறு நாட்களில் விசாரணைகளிற்காக அழைத்திருந்தனர்.
அவருடைய வங்கி கணக்கும் எனது வங்கி கணக்குகளும் சரி பார்க்கப்பட்டன. அனைத்தும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருந்துள்ளன.
உதாரணமாக ‘காரைநகர் மணிவாசகர் சபை’ சைவசமய பாட பரீட்சையில் பரிசு பெற்றவர்களிற்கு 2006 முதல் 2016 வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் தங்கப்பதக்கம் பரிசாக வளங்க என்னால் அனுப்பப்பட்ட நிதி காரைநகரில் அந்த நபருக்கு அனுப்பப்பட்டு மறுநாள் மணிவாசகர் சபைக்கு அந்த நிதி வழங்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று 2013 இல் காரைநகர் மாணவர் நூலகத்திற்காக அவுஸ்திரேலியாவில் இருந்து வைத்தியர் ஒருவர் எழுதிய ‘மகப்பேற்று மருத்துவமும் மகளிர் சுகாதாரமும்’ என்னும் நூல் கனடாவில் விற்பனை செய்து திரு. அமிர்தலிங்கம் மற்றும் என்னூடாக அனுப்பப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபா வரையான நிதி ஆராயப்பட்டது.
அத்துடன் வருடந்தோறும், மாதா மாதம் என்னால் அவருடைய கணக்கிற்கு சிறுக சிறுக 25,000 ரூபா முதல் 5 இலட்சம் ரூபா வரையாக அனுப்பிய அனைத்து நிதி பரிமாற்றங்களின் போதும் ஏன் எதற்காக என்ற விபரங்கள் சரி பார்க்கப்பட்டன. அன்றைய காலத்தில் 2006 முதல் 2020 வரையான காலப்பகுதியில் என்னால் ஊரிற்காக பணம் அனுப்பப்பட்ட போதெல்லாம் இமெயில் ஊடாக அந்த பணம் எதற்காக அனுப்பப்படுகிறது என்பதனையும் யாருடைய பணம் என்பதனையும் இமெயில் ஊடாக தெரிவித்திருந்தேன். என்மீதான பல விடயங்களை புலனாய்வு பிரிவினருக்கு எவ்வித சந்தேகமும் இன்றி அப்போதைய இமெயில் பரிமாற்றங்கள் மூலம் தெளிவுபடுத்தியிருந்தேன். எனது இமெயில் முழுமையாக புலனாய்வு துறையினரால் பார்வை இடப்பட்டிருந்தது.
ஆனாலும் எல்லாவற்றையும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் காரைநகர் மணிவாசகர் சபை தலைவராக இருந்த திரு. மு. சு. வேலாயுதபிள்ளை, செயலாளராகவிருந்த திரு. வே. முருகமூர்த்தி, அப்புத்துரை பள்ளிக்கூடம் அதிபர் திரு.நேத்திரானந்தன் மற்றும் காரைநகர் அபிவிருத்தி சபை கணக்குகள் மற்றும் ரசீதுகள் அனைத்தும் அப்போது பதவி வகித்தவர்கள் ஊடாக அவர்களையும் விசாரணைகளிற்காக அழைத்து புலனாய்வு துறையினர் பெற்றுக்கொண்டனர்.
அது மட்டுமன்றி எனது வீட்டு தேவைகளிற்காக அனுப்பியவை, தர்மத்திற்காக பாடசாலை மாணவ மாணவிகளின் படிப்பிற்காக அனுப்பிய மாதாந்த தொகை மற்றும் காரைநகரில் கடைகள் மூலம் தர்மத்திற்காக வழங்கப்பட்ட மாதாந்த உதவிகளிற்காக வழங்கப்பட் உதவிகளும் கடை உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டதுடன் எங்கள் வீட்டில் நாளாந்த கூலி வேலை செய்த நபர் உட்பட அழைத்து விசாரிக்கப்பட்டனர்.
அவை மட்டுமன்றி கல்விக்காக பணம் பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் முன்னாள் போராளிகளா என்றும், கண் தெரியாதவர்களாக அல்லது ஊனமுற்றவர்களாக இருந்தால் போராளிகளா என்றெல்லாம் ஆராய்து உறுதி செய்தார்கள்.
இவை அனைத்தும் திரு. முத்து பொன்னம்பலம் கனடாவில் இருந்து தனது துருப்பிடித்த அறிவிற்கும் இருட்டு அறையில் இருபது வருடமாக வாழ்ந்து கொண்டு பெற்ற ஜீரணிக்க முடியாத பொறாமை என்னும் அடிவயிற்றில் பற்றி எரியும் நெருப்பே காரணம். ஆனாலும் கண்ணுக்கு தெரியாத கடவுள் புலனாய்வின் அனைத்து தேடல்களிற்கும் எனக்கான பதிலை ஆதாரங்களுடன் உரியவர்கள் மூலம் அனுப்பி வைத்தான்.
அவை மட்டுமன்றி கனடா காரை கலாசார மன்றத்தின் 2014-2015 வரையான தீசன் திரவியதாதன் (பதில்)செயலாளராக பணியாற்றிய காலத்தில் காரைநகர் அபிவிருத்தி சபைக்கு அனுப்பப்பட வேண்டிய எந்த நிதியும் தனிப்பட்ட எந்த நபர்களிற்கும் அனுப்பப்படவில்லை, என்பதனை உறுதிப்படுத்தவும் காரைநகர் அபிவிருத்தி சபையின் வங்கி கணக்குகளும் சரி பார்க்கப்பட்டன. பாடசாலைகள் நிரந்தர வைப்புக்காக அனுப்பப்பட்ட நிதி மட்டுமன்றி மற்றைய அனைத்து தேவைகளிற்கும் அனுப்பப்பட்ட கனடா காரை கலாசார மன்றத்தின் நிதி காரைநகர் அபிவிருத்தி சபை கணக்கிற்கு அனுப்பப்பட்டிப்பதுவும் அதுவும் காரைநகர் BOC மற்றும் NSB வங்கி முகாமையாளர்கள் மூலம் புலனாய்வு துறையினர் வங்கிக்கணக்குகளை பெற்றிருந்தனர்.
காரைநகர் அபிவிருத்தி சபையினரின் வங்கி கணக்குகள் வங்கிகள் மூலமாகவும் புலனாய்வு துறையினரால் ஏற்கனவே பெறப்பட்டிருந்ததும் எம்மை விசாரணைகளிற்கு அழைப்பதற்கு முன்னரே புலனாய்வு துறையினர் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் முற்கூட்டியே பல தகவல்களை தாமாகவே பெற்று வைத்திருந்ததும் விசாரணைக்காக எம்மை அழைத்ததன் பின்னர் தான் எமக்கே தெரியவும் வந்தது.
இந்த நிலையில் காரைநகர் அபிவிருத்தி சபை மட்டுமல்ல, தீசன் திரவியதாதன், கனடா காரை கலாசார மன்றம் மற்றும் காரைநகர் பாடசாலைகளும் என்னால் கொடுக்கப்பட்ட பணம் ஐந்து ரூபாவாக இருந்தாலும் ஐந்து இலட்சம் ரூபாவாக இருந்தாலும் அதற்கான பதிவுகளையும் ஆவணங்களையும் ஆதாரங்களோடு மட்டுமல்ல தீசன் திரவியநாதன் ஆகிய என்னைப்பற்றியும் மறந்து விடவில்லை என்பதும் தமது கைப்பட ஆவணமாக ரசீது நம்பர்கள் உட்பட எழுதிக்கொடுத்தார்கள் என்பதும், இத்தனை நபர்களை விசாரித்ததும் இவர் மூலமாக புலனாய்வுத் துறையினரின் மூன்றாவது விசாரணையும் இறுதியானதுமான விசாரணை கடந்த வருடம் யாழ்ப்பாணம் புலனாய்வு துறை காரியலயத்தில் புலனாய்வு துறையினரின் இறுதி அறிக்கைகள் மூலமாகவே என்னாலும் அறிந்து கொள்ளப்பட்டது.
ஆனாலும் சற்றும் மனம் தளராத மாதன முத்தா அவர்கள் மீண்டும் கடந்த வருடம் காரைநகரில் உள்ள ‘காரைநகர் அபிவிருத்தி சபையை’ பழிவாங்கத்துடிக்கும் சிலரிடம் நிதி அனுப்பி ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ யையும் எக்காரணம் காட்டியாவது மூடி சீல் வைத்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பாட்டில் மூழ்கியுள்ளார். அதற்கான ஆதாரமாக சம்பந்தமே இல்லாத ஒருவரிற்கு பணம் அனுப்பியுள்ளதும் அதற்கான ரசீதினையும் செயற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட நபர் வெளியிட்டுள்ளார்.
கனடா காரை கலாசார மன்றமும் காரைநகர் அபிவிருத்தி சபையும் இணைந்து 2024 வரை அளப்பரிய செயற்திறன்கள் பலவற்றை காரைநகர் மக்களிற்காக வழங்கியுள்ளது. ஆனாலும் அந்த காலங்களில் இது போன்ற பொறாமைகள் காழ்ப்புணர்ச்சிகள் தலைவிரித்து ஆடியதில்லை ஆனபோதிலும் ஆதாரங்களும் தேவையான சாட்சிகளும் கடவுள் உறுதியாகவும் அறுதியாகவும் கொண்டு வந்து கொடுத்துள்ளான். உண்மையின்பால் செயற்படுகிறவர்கள் எதனையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டியதோ அன்றி ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டி தேவையோ இல்லை. கடவுள் தேவையான இடத்தில் இன்னொரு ரூபத்தில் வந்து நிற்பான்.
திரு. முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் எவ்வளவு வக்கிரகம் கொண்டவர் என்பதும், தலைமறைவு வாழ்க்கை வாழும் நபர் கனடா காரை கலாசார மன்றத்தை மட்டு மல்ல காரை இந்து பழைய மாணவர் சங்கத்தையும் blackmail செய்து மூடி வைத்துள்ளதுடன் இவருடையை இந்த கிரிமினல் நடவடிக்கைகள் வெகுவிரைவில் முடிவிற்கு வரும்.
அது மட்டுமன்றி இன்றி AI தொழில் நுட்பத்தின் ஊடாக உண்மையை பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் சித்தரிக்கும் வகையில் முத்து பொன்னம்பலம் புத்துக்குள் இருந்து செயற்படுத்தும் செயற்பாடுகள் மூலம் தனது மானம் போய்விட்டதாக ‘மான நஷ்ட ஈடு’ வழக்கு தொடர்ந்தவர் அனைவரும் அறிய பொதுவழியில் நீங்கள் விரும்பிய போதெல்லாம் சென்று பார்வையிடும் வகையில் ‘jail’ என்னும் கம்பிகளிற்கு இடையில் சென்று பார்வையிடக்கூடிய காலம் கனிந்து வருகிறது.
சட்டமும் ஒழுங்கும் இங்கு யாருடைய சட்டைப் பொக்கற்றுக்களிற்குள்ளும் இல்லை. 2023இல் கோத்தபாஜ ராஜபக்ஸ ஜனாதிபதி காலத்தில் பயங்கரவாத புலனாய்வு துறையின் நாலாம் மாடியிலேயே எனக்கான நியாயம் தவறவில்லை.
இதோ இலங்கையிலும் இன்று சட்டம் எவரின் சட்டைப்பொக்கற்றுக்களில் இல்லை என்கிற காலம் கனிந்து வந்துள்ளது.
இது ஒரு பெரிய வரைதல். முத்து பொன்னம்பலம் புத்துக்குள் இருந்து செயற்பட்டாலும் கனடாவிலும் இலங்கையிலும் இவருடைய செயற்பாடுகளினால் நிறையவே பல அனுபவங்களை பெற்றுக்கொள்வதுடன் எனது உண்மையையும் எனது செயற்பாடுகளையும் மீண்டும் மீண்டும் உரசிப்பார்த்து புடம் போட்டுக்கொள்வதன் ஊடாக புத்துணர்ரச்சி பெற்றுக்கொள்கிறேன்.
நன்றி








Leave a Reply
You must be logged in to post a comment.