காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது.
காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது.
06.11.2026 இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதேச சபையின் உபதவிசாளர் பதவி தெரிவிற்கான அமர்வில் மூன்று அணிகள் சேர்ந்து அமைத்துக்கொண்ட ஒப்பந்தங்களை ஆறு அணிகளும் மதிப்பளித்துள்ளன.
சுயேட்சை அணி, மான் கட்சி, சைக்கிள் கட்சி என்பன சேர்ந்து செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் சைக்கிள் கட்சியை சேர்ந்த ஒருவர் அடுத்து வரும் 16 மாதங்கள் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட வேண்டும். அது இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
மூன்று அணிகளின் ஒப்பந்த பிரகாரம் 17.11.2026 நடைபெறவுள்ள தவிசாளர் தெரிவின் போது மான் கட்சியை சேர்ந்த உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
இந்த நிலையில் மூன்று கட்சிகளின் ஒப்பந்தங்களை செயலிழக்க செய்யும் வகையில் ஒப்பந்தத்தில் ஈடுபடாத மன்றைய மூன்று கட்சிகளும் அரசியல் காய் நகர்த்தல்களிற்குள் ஈடுபடாமல் காரைநகரில் நாகரீகமான அரசியலை கொண்டு செல்ல மிகப்பெரும் பங்கு வகித்துள்ளன.
அத்துடன் அரசியலில் பதவி ஆசைகளிற்கு உட்பட்டு மற்றைய கட்சிகளுடன் இணைந்து ஏற்கனவே போடப்பட்டுள்ள சுயேட்சை, மான், சைக்கிள் அணிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஒப்பந்த விழுமியங்களை பேணி எதிர்கால காரைநகர் அரசியலை மிகவும் சரியான பாதையில் வழிநடாத்தி சென்றுள்ளார்கள் என்பதில் காரைநகர் மக்கள் சார்பாக அனைத்து காரை மக்களும் பெருமை கொள்கின்றார்கள்.
நம்பிக்கை, நாணயம், இறையாண்மை என்பது ஊர்ப்பற்றுடன் மட்டும் நின்றுவிடாது அரசியலிலும் இந்த நாகரீகம் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர்களால் கடைப்பிடிக்கப்பட்டு காரை மக்களின் ஒற்றுமை ஒருபடி மேலும் இன்று உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக திரை மறைவில் பல திட்டங்கள் பதவி ஆசைகளை முன்வைத்தும், தனிமனித வசைபாடல்களை முன்வைத்தும் பிரதேச சபைக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுத்த முயற்சித்த போதும், காரைநகர் பிரதேச சபையின் முன்றலில் இந்த வருடம் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும் காரை மண்ணின் பெயர் சொல்லும் சிவனும் இன்று நடைபெற்ற பிரதேச சபை அமர்வில் மனிதனின் முகம் பார்த்து மனச்சாட்சியை தவிர்த்து எவராலுமே நடந்து கொள்ள முடியாது என்பதனை உணர்த்தியுள்ளது.
அந்த வகையில் காரைநகர் மக்கள் அனைவரும் தற்போது காரைநகர் பிரதேச சபையை அலங்கரிக்கும் ஆறு கட்சிகளையும் சேர்ந்த 11 அங்கத்தவர்களையும் பாராட்டி மதிப்பளிக்க கடமைப்பட்டவர்கள். கட்சிகளிட்காகவோ அல்லது தனிமனித விருப்பு வெறுப்புகளிற்காகவோ அன்றி காரை மக்களின் அபிலாசைகளிற்கு மதிப்பளித்து ஒரு அணியில் செயற்பட்டிருப்பது மிகமிக வரவேற்பை பெற்றுள்ளது.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
இன்றைய தினம் உபதவிசாளராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள திருமதி கிளியோபெற்ரா மகேஸ்வரன் அவர்களிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுகாரை மண் சிறப்புற வாழ்த்துவோமாக.








Leave a Reply
You must be logged in to post a comment.