காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;
காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;
சுகிர்தமாலா வரதராசா குடும்பம்
சிவசுப்பிரமணியம் சிவகரன் குடும்பம்
நித்திய பூசைக்குரிய ஏற்பாடுகள் கோயில் தர்மகர்த்தா திருமதி சோமசேகரம்பிள்ளை செல்வராணி தலைமையில் செயற்படும் அடியவர்கள் திரு.பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன், திரு. கணபதிப்பிள்ளை பூவன் அவர்கள் மூலமாக 2025 ஏப்ரல் மாதம் முதல் செயற்படுத்தப்பட்டு வருவதும் யாவரும் அறிந்ததே.
அந்த வகையில் மாதாந்த நித்திய பூசைக்கு அடியவர்கள் வளங்கும் உபயத்திற்கான நிதியும் கோயில் ஆதீனகர்த்தாக்களின் பெயரில் உள்ள வங்கி கணக்கில் உபயகாரர்களால் வைப்பில் இடப்படுகின்றன. அதே வங்கிக் கணக்கு மூலமாக கோயிலின் மற்றைய அன்றாட தேவைகள், அன்பளிப்புக்கள் மற்றும் உண்டியல் வரவுகள் உட்பட மற்றைய வரவுகளும் வைப்பில் இடப்படுகின்றன.
ஆகவே நிரந்தர மாதாந்த பூசை உபயகாரர்கள் தங்களது மாதாந்த உபயத்திற்குரிய பணத்தினை வங்கி கணக்கிற்கு அனுப்பி வைப்பதுடன் நித்திய பூசைக்குரிய ரசீதினை பெற்றுக்கொள்ள ஆதீனகர்த்தா திருமதி. செல்வராணி சோமசேகரம்பிள்ளை அல்லது திரு. சிவறைஞ்சன் அல்லது திரு. பூவன் அவர்களை தொடர்பு கொள்வதன் ஊடாக மட்டுமே தங்களது நிதி நித்திய பூசை கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதனையும் அதனூடாக மட்டுமே வருட முடிவில் நித்திய பூசைக்காக தங்களால் வளங்கப்படும் நிதிக்கான கணக்கு அறிக்கையினை வெளியிட முடியும் என்பதுடன் வருட முடிவில் நித்திய பூசைக்கணக்கில் மிகுதமாக உள்ள நிதி கணக்கிடப்பட்டு நிரந்தர நித்திய பூசை கணக்கில் தொடர்ச்சியாக வைப்பில் இடப்பட்டு காலா காலத்திற்கும் பயன்பெறும் நிலையில் நித்திய பூசை நிரந்தர வைப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்.
2025 ஏப்ரல் மாதம் முதல் 2026 மார்ச் வரையான மாதாந்த நித்திய பூசைக்கான உபயகாரர்கள் வளங்கிய நிதி விபரம் தெளிவாகவும் வரவு செலவு விபரங்களுடனும் அறியப்படுத்தப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.
அந்த வகையில் 2026 ஏப்ரல் மாதம் முதல் இதுவரை மாதாந்த நித்திய பூசைக்காக வங்கி மூலம் வங்கிக்கணக்கிற்கு நிதி அனுப்பியவர்கள் இதுவரை ரசீது பெற்றுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து அறியப்படுத்தி அதற்குரிய ரசீதினை பெற்றுக்கொள்ளவும்.
தொடர்ந்து மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் தமது உபயத்திற்கான நிதியினை வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது வேறு நபர்களூடாகவோ அனுப்பி வைத்திருந்தால் நித்திய பூசைக்குரிய ரசீதினை பெற்றுக்கொள்வது மிகமிக முக்கியமானதாகும்.
நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய அனைத்து நிதி விபரங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் ஆதீனகர்த்தா திருமதி. செல்வராணி சோமசேகரம்பிள்ளை அவர்களது தலைமையில் அவருடைய இறுதி முடிவுகளிற்கு அமையவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் மேற்கொண்டு காலாகாலத்திற்கும் நித்திய பூசையில் தடங்கல் ஏற்படாதவாறு இனிவரும் காலங்களிலும் நடைபெறுவதற்கு நித்திய பூசை நிரந்தர வைப்பு நிதி மேற்கொண்டு வளர்ச்சி பெற வேண்டும் என்பதும், தங்களால் நித்திய பூசைக்காக வளங்கப்படும் நிதி மட்டுமே மாதாந்த செலவுகள் போக நிரந்தர வைப்பு நிதியத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்றது என்பதையும் அறிந்து கொள்க.
2025 ஏப்ரல் மாதம் முதல் 2026 மார்ச் வரையான 12 மாத காலத்தில் நித்திய மாதாந்த பூசைகளிற்காக வளங்கிய நிதியில் மொத்த செலவுகள் போக மிகுதி 6 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதி நிரந்தர வைப்புக்கு மாற்றப்பட்டதும் அந்த பகுதிக்குரிய கணக்கு விபரங்களை மீண்டும் இங்கே தரப்படுகிறது.
ஆதீனகர்த்தா திருமதி சோமசேகரம்பிள்ளை அவர்களது பெயரில் அமைந்துள்ள நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய நடைமுறை வங்கி கணக்கு விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
நித்திய பூசை உபயகாரர்கள் அனுப்பி வைத்ததும் நித்திய பூசைக்குரிய ரசீதினை தொடர்கு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.
மேலதிக தொடர்புகளிற்கு.
திருமதி செல்வராணி சோமசேகரம்பிள்ளை + 94 773 763 417
திரு. பா.சிவறைஞ்சன் +94 (77) 469 0289
திரு.க.பூவன் +94 (77) 797 1267






Leave a Reply
You must be logged in to post a comment.