நாள் : Monday, October 19, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் பிரதேச சபையின் கவனத்திற்கு: காரைநகர் J/47 பிரதேசத்தில் அமைந்துள்ள மருதடி – நீலிப்பந்தனை வீதி, புதுவீதி – நீலிப்பந்தனை வீதி நிலைமை

காரைநகர் பிரதேச சபையின் கவனத்திற்கு:

காரைநகர் J/47 பிரதேசத்தில் அமைந்துள்ள மருதடி – நீலிப்பந்தனை வீதி, புதுவீதி – நீலிப்பந்தனை வீதி என்பன வழமை போல் அடுத்து வரும் இரண்டு மாதங்களிற்கு பிரதேச சபையினால் மூடப்படுவதாக அறிவித்து பொதுமக்களிற்கு இதனூடான போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அறிவிக்கவும், இவற்றிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்று பாதையை தெரிவித்தும் அறிக்கை விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

அல்லது இப்பகுதி தங்களது ஆழுமைக்கு அப்பாற்பட்ட பிரதேசம் என பிரகடனம் செய்து தங்களது பொறுப்புக்களில் இருந்தும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் விபரத்தில் இருந்தும் இந்த வீதிகளை விடுவித்தும், வீதிகள் உள்ளிட்ட இப்பகுதியினை நன்னீர் சேகரிக்கும் குளமாக பிரகடனம் செய்தும் அறிவிக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பிரதேச சபை ஊடாக இப்பகுதி மக்கள் இந்த இரு வீதிகளையும் மழை காலத்திலும் பாவனைக்கு உரிய வகையில் செப்பனிட திட்டங்களை முன்வைத்த போதும் இதுவரை எந்தவித முன்னெடுப்பும் காட்டாத பிரதேச சபையானது இந்த வீதியானது அடுத்து வரும் இரண்டு மாதங்களிற்கு பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய அறிவித்தலை வெளியிடுமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி உங்களது கரிசனைக்கு.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026 கனடா வாழ் காரை மக்களும்...

2018ம் ஆண்டு(எட்டு ஆண்டுகளிற்கு முன்னர்) காரை இந்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது…!

2018ம் ஆண்டு(எட்டு ஆண்டுகளிற்கு முன்னர்) காரை இந்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605