நாள் : Monday, October 19, 2026
--:--:--
👁️
Election

அமெரிக்கா… அமெரிக்கா… அமெரிக்கா…

கனடாவும் அமெரிக்காவும் நிலத்தினால் கிழக்கு மேற்காக பல்லாயிரம் மைல்கள் தமது எல்லைகளை கொண்ட நாடுகள். இரு வேறு நாடுகளாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரே வாழ்வியல் தன்மைகளை கொண்ட நாடுகள்.

ஆனால் கனடாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்களாலும் ஊடகங்களாலும் இப்ப வரை ஜீரணிக்க முடியாதுள்ள செய்தி என்னவெனில் Donald Trump மீண்டும் ஜனாதிபதி ஆகியுள்ளார் என்ற செய்தி.

எப்படி இது நடந்தது… என்ற கேள்விக்கு விடை காண முயன்றேன். கனடாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான CTV தனது இரவு 9 மணி செய்தியில் சில தகவல்களை வெளியிட்டது.

Kamala Harris ஏன் தோற்கடிக்கப்பட்டார் என்றும் Donald Trump ஏன் வெற்றிபெற வைக்கப்பட்டார் என்றும்..!

முதல் இரண்டு காரணங்கள் யாதெனில்..

1. Kamala Harris இந்திய ஆபிரிக்க வம்சாவளி

2. அவர் ஒரு பெண்

இதை நான் சொன்னால் தப்பு, அல்லது தண்டனைக்குரிய குற்றம், ஆனால் அமெரிக்க மக்கள் இன்று 2024 இல் தமது நாட்டின் ஜனாதிபதியாக ஒரு பெண்ணை தெரிவு செய்ய தயாராக இல்லை என்பதும், அமெரிக்காவில் இன்னமும் இனவாதம் உள்ளது என்பதை தெளிவாக விளங்க வைத்துள்ளது மக்கள் தீர்ப்பு ஆகும்.

முன்னர் கிளரி கிளிங்ரன் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்ட் ட்றம்ற் பின்னர் Biden அவர்களிடம் தோற்றார் மீண்டும் பெண் வேட்பாளர் Kamala Harris உடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இங்கே Trump தோற்கடிக்கப்பட வேண்டியவராக இருந்தாலும் ஒரு பெண் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டுமா என்ற கேள்வியும் அதிலும் இந்திய ஆபிரிக்க வம்சாவழி பெண் ஜனாதிபதி ஆக வேண்டுமா என்ற கேள்வியுமே பிரதான இடம் வகித்ததாக கனடிய முன்னணி தொலைக்காட்சியான CTV தனது பிரதான இரவு 9 மணி செய்தியில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் என்று ஒரு பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்கின்ற நிலமை ஏற்படுகின்றதோ அன்று தான் உலகில் ஆண் பெண் சமத்துவத்துக்கான அங்கீகாரம் நடைமுறைக்கு வரும். காரணம் நீங்கள் தான் பலரும் அமெரிக்கா தான் வல்லமை பொருந்திய நாடாக இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

எனது சொந்த கருத்து என்னவெனில் Donald Trump எந்த பெண்களிடமும் தோற்று போக மாட்டார் என்பதும் அவரிற்கு எதிராக எந்த பெண் வந்தாலும் தோற்றுத்தான் போவார்கள் என்பதும் அவரது கிரக ஜாதக பலனில் எழுதப்பட்டுள்ளது.

எதிர்பாராதவைகளை நடாத்திக் காட்டுவது கடவுள் மட்டுமல்ல அரசியலும் தான்..!

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026 கனடா வாழ் காரை மக்களும்...

2018ம் ஆண்டு(எட்டு ஆண்டுகளிற்கு முன்னர்) காரை இந்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது…!

2018ம் ஆண்டு(எட்டு ஆண்டுகளிற்கு முன்னர்) காரை இந்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605